அமெரிக்கா கடும் எச்சரிக்கை ...தினசரி 20,000 தென் கொரிய மக்கள் கொல்லப்பட வாய்ப்பு:
டிரம்ப் அரசாங்கம் வடகொரியா மீது போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால் தினசரி 20,000 அப்பாவி மக்கள் தென் கொரியாவில் கொல்லப்பட வாய்ப்பு உள்ளதாக முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார். வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் முன்னாள் விமானப்படை தலைமை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்கும் எனில் தென் கொரியாவில் உள்ள 20,000 அப்பாவி மக்கள் தினசரி கொல்லப்பட வாய்ப்பு உள்ளதாகவும், இது அணுஆயுதம் பயன்படுத்தினால் பலமடங்கு அதிகரிக்கும் எனவும் கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். "இதனிடையே தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தனித்தனியே அமெரிக்காவிடம் போர் குறித்து விவாதித்ததாகவும், தற்போதைய சூழலில் போர் தீர்வல்ல எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் கிம் ஜோங் வுன் மேற்கொண்டு வரும் ஏவுகணை சோதனை மற்றும் அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனில், அவர் தோற்கடிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா எடுத்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே அமெரிக்கா தங்கள் மீது போர் அறிவித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ள கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா, "போரை முதலில் அறிவித்தது அமெரிக்காதான் என்று வடகொரியா கூறியுள்ளது அபத்தமானது. அமெரிக்கா அமைதியைத்தான் விரும்புகிறது. அமெரிக்காவை தூண்டும் நடவடிக்கையை வடகொரியா நிறுத்திக் கொள்ளவேண்டும்" என்றார்.
தொடர் ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வரும் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக இரு நாட்டுக்கும் இடையே போர் ஏற்படும் அபாயம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா போர் அறிவித்துள்ளதாக வடகொரியா கூறியுள்ளதை அபத்தம் என்று அமெரிக்கா விமர்சித்துள்ளது. மேலும் அதிரடி பொருளாதார தடைகளை அமுல் படுத்துவதால் மட்டுமே வடகொரியா கட்டுக்குல் வரும் என்ற நிலைப்பாட்டில் சீனாவும் தற்போது களமிறங்கியுள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார தடைகள் தங்களை எதுவும் கட்டுப்படுத்தாது என வடகொரியா பகிரங்கமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா கடும் எச்சரிக்கை ...தினசரி 20,000 தென் கொரிய மக்கள் கொல்லப்பட வாய்ப்பு:
Reviewed by Author
on
September 27, 2017
Rating:
Reviewed by Author
on
September 27, 2017
Rating:


No comments:
Post a Comment