உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கை.
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான உலகமொன்றை உருவாக்கி கொடுத்தல் நம் அனைவரதும் கடமையாகும் என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர சட்டத்தரணி மரினி த லிவேரா தெரிவித்துள்ளார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
‘தாய்தந்தையர்களின் வயது வந்தரவர்களின் பாசத்தைத் தக்கவைப்போம்! அழகியதொரு உலகிற்கு சிறார்களை அழைப்போம்’ என்பது உலக சிறுவர் தினத்தின் இவ்வருடத்திற்கான தொனிப்பொருளாகும். சிறுவர்களின் மீது சமூகத்தின் கவனம் அதிகமாக செலுத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே இம்முறை நாம் உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். தற்போது சிறுவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் வன்முறைக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்களை கேட்கக்கூடியதாக உள்ளது. இந்நிலை மிகவும் மனவருத்தத்திற்குரியதாகும். இந்நிலையை மாற்றியமைப்பதற்கு சமூக ரீதியிலான மாற்றமொன்று அவசியமாகவிருக்கின்றது. குறிப்பாக சிறுவர்கள் மீது கூருணர்வுமிக்க மனதைக் கொண்ட மனிதர்கள் தோன்றுவது அத்தியாவசியமானதொரு அம்சமாகும்.
நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தீர்க்கமான அம்சமாக அமையும் சிறுவர்களின் உடல், உள, பாலியல் மற்றும் புறக்கணிப்பு போன்ற சகல விதமான துஷ்பிரயோகங்களிலிருந்தும் விடுபட்டதொரு பாதுகாப்பான உலகமொன்றை உரித்தாக்கித் தருதல் நம் அனைவரினதும் கடப்பாடும். இவ்விடயத்தை சமூகத்தில் வாழும் அனைத்து தரப்புகளும் ஒருங்கிணைந்ததொரு அணுகுமுறையின் மூலமே ஈடேற்றிக் கொள்ளுதல் வேண்டும்.
பிள்ளைகளை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் பெற்றோரின் இன்றிமையாத பொறுப்பாகும். குறிப்பாக பெற்றோர் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளை கண்காணித்து அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றுதல் வேண்டும்.
நாட்டில் காணப்படும் சிறுவர் துஷ்பிரயோகங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக சிறுவர்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது. பாதுகாப்பற்ற மற்றும் தனிமையான இடங்களில் உலாவுவதை தவிர்க்குமாறு நான் சிறுவர்களை அன்புடன் வேண்டுகின்றேன். மேலும், ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் எவரேனுமொருவர் தகாத அழுத்தமொன்றை பிரயோகிப்பாராயின் அதைப் பற்றி நம்பிக்கைக்கு பாத்திரமான வயதுவந்த ஒருவரிடம் கூறுமாறும் நான் சிறுவர்களை கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
நாட்டில் எந்தவொரு இடத்திலேனும் ஏதேனுமொரு பிள்ளைக்கு ஏதேனும் பிரச்சினையொன்று ஏற்படுமாயின் அது பற்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 1929 இலங்கை சிறுவர் தொலைபேசி சேவையுடன் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
சட்டத்தரணி மரினி த லிவேரா,
தலைவர்,
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கை.
Reviewed by Author
on
September 30, 2017
Rating:
Reviewed by Author
on
September 30, 2017
Rating:


No comments:
Post a Comment