‘இந்தியன்-2’ படத்திற்காக மீண்டும் இணையும் ஷங்கர் - கமல்ஹாசன்.
ஷங்கர் இயக்கும் ரஜினியின் ‘2.0’ பட வேலைகள் முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து ஷங்கர் அடுத்ததாக அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ‘2.0’படம் வெளியானதும், ஷங்கர் இயக்கத்தில் 1996-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற கமலின் ‘இந்தியன்’ படத்தின் 2-வது பாகம் தயாராக இருப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
தற்போது கமல்ஹாசன் கூறி வரும் அரசியல் கருத்துக்களுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் ஊழலை எதிர்த்தும், அரசியல் நேர்மையையும், சீர்திருத்தத்தையும் சுட்டிக்காட்டிய இந்தியன் படத்தின் 2-வது பாகம் தயாரித்தால் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். கமலின் கருத்துக்களையும் இதில் அழுத்தமாக கூறமுடியும். எனவே, ‘இந்தியன்-2’ படத்தை ஷங்கர் இயக்க அதிகவாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
‘இந்தியன்-2’ படத்திற்காக மீண்டும் இணையும் ஷங்கர் - கமல்ஹாசன்.
Reviewed by Author
on
September 17, 2017
Rating:

No comments:
Post a Comment