மூட்டுவலிக்கு நிவாரணம் தரும் கண்டந்திப்பிலி ரசம்....
கை, கால், உடல் வலி, மூட்டுவலி எல்லாவற்றிருக்கும் நிவாரணம் கிடைக்கும். வாதத்தை போக்கும். இன்று கண்டந்திப்பிலி ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
மூட்டுவலிக்கு நிவாரணம் தரும் கண்டந்திப்பிலி ரசம்
தேவையான பொருட்கள் :
தனியா - ஒரு டீஸ்பூன்,
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்,
திப்பிலி - 5 குச்சிகள்,
புளி - நெல்லியளவு,
மஞ்சள் தூள் - சிட்டிகை.
உப்பு - தேவைக்கு,
நெய் - அரை டீஸ்பூன்,
கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க.
செய்முறை :
புளியை தண்ணீரில் ஊற வைத்து கரைத்து வடிகட்டி கொள்ளவும்.
வெறும் வாணலியில் தனியா, துவரம் பருப்பு, மிளகாய், மிளகு, சீரகம், திப்பிலி ஆகியவற்றை தனித்தனியாக போட்டு வறுத்து ஆற வைத்து பொடித்து கொள்ளவும்.
புளித்தண்ணீருடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அரைத்த விழுது, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நுரைத்து வந்த பிறகு இறக்கவும்.
மற்றொரு வாணலியில் நெய் விட்டு சூடானதும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து ரசத்துடன் கலக்கவும்.
சத்தான கண்டந்திப்பிலி ரசம் ரெடி.
மூட்டுவலிக்கு நிவாரணம் தரும் கண்டந்திப்பிலி ரசம்....
Reviewed by Author
on
September 02, 2017
Rating:

No comments:
Post a Comment