சிங்கப்பூரின் தற்காலிக அதிபரான தமிழர்.....
சிங்கப்பூரின் தற்காலிக அதிபராக இந்திய வம்சாவளி தமிழரான ஜோசப் யுவராஜ் பிள்ளை இன்று பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் டோனி டானின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்த நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் சிங்கப்பூர் நாட்டின் தற்காலிக அதிபராக இந்திய வம்சாவளி தமிழரான ஜோசப் யுவராஜ் பிள்ளை(83) இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.
நீண்டகாலமாக அதிபரின் உயர்மட்ட ஆலோசகர் குழுவின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் ஜோசப் யுவராஜ் பிள்ளை, இதற்கு முன்னரும் சிங்கப்பூர் அதிபர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் செல்லும் வேளைகளில் அந்நாட்டின் தற்காலிக அதிபராக இருந்து பதவியை திறம்பட நிர்வகித்து வந்துள்ளார்.
இதுபோல், 60 முறைக்கும் மேலாக தற்காலிக அதிபர் பதவியை வகித்துள்ள இவர், கடந்த 2007ம் ஆண்டு அந்நாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்ற போது அதிக பட்சமாக 16 நாட்கள் சிங்கப்பூரின் அதிபர் பொறுப்பில் இருந்துள்ளார்.
வேட்பு மனு தாக்கலின் போது போட்டி இல்லாமல் போனால், வரும் 13ஆம் திகதி வரையிலோ, அல்லது போட்டி உருவாகி, வாக்குப்பதிவு நடந்தால் வரும் 23ஆம் திகதி வரையிலோ இந்தப் பதவியில் இவர் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு எல்லாத்துறைகளிலும் நிகரில்லாத பணியாற்றிய ஜோசப் யுவராஜ் பிள்ளை 1971ஆம் ஆண்டிலிருந்து 1996ஆம் ஆண்டு வரை தொடர்ந்து, சிங்கப்பூர் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்துள்ளார்.
சாதிக்கத் துணை புரிந்தவர். மேலும், சிங்கப்பூர் முன்னேற்ற வங்கி, சிங்கப்பூர் பங்கு வர்த்தக பரிமாற்ற நிறுவனம், நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் அரசின் நிரந்தர செயலாளர் உட்பட பல பதவிகளை வகித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் தற்காலிக அதிபரான தமிழர்.....
Reviewed by Author
on
September 01, 2017
Rating:

No comments:
Post a Comment