முதன்முறையாக அமெரிக்க - இலங்கை கடற்படையினரின் பயிற்சி நடவடிக்கை
அமெரிக்க - இலங்கை கடற்படையினருக்கு இடையில் முதல் முறையாக பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் ஒக்டோபரில் இந்தப் பயிற்சிகள் இடம்பெறவுள்ளதாக அமெரிக்காவின் பதில் இராஜாங்க செயலாளர் எலிஸ் ஜி வெல்ஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளின் கடற்படையினருக்கும் இடையிலான உறவை கட்டியெழுப்புவதே இதன் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற இந்து சமுத்திரம் 2017 மாநாட்டில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பிராந்தியத்தில் உள்ள அனைத்து கடற்படையினரும் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்ளும் நாள் அதிக தூதரத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதன்முறையாக அமெரிக்க - இலங்கை கடற்படையினரின் பயிற்சி நடவடிக்கை
Reviewed by Author
on
September 02, 2017
Rating:

No comments:
Post a Comment