அண்மைய செய்திகள்

recent
-

வித்தியா வித்தாகி இரண்டு வருடங்களின் பின்பு....கவிஞர்-வை-கஜேந்திரன்

வித்தியா வித்தாகி
முடிந்த இரண்டு வருடங்களின் பின்பு
விடிந்திருக்கின்றது இன்று
படிந்துபோன பழிச்சுமையுடன்....

அலைந்த   ஆன்மாவுக்கு
அமைதி கிடைத்தது
அழுதுதோய்ந்த   அன்னையின் குரலுக்கு
அருமருந்து ஒன்று.....கிடைத்தது.

சிந்திய கண்ணீர் துளிகள்
வருந்திய உள்ளங்கள்...
பிந்திக்கிடைத்த நீதி-அதுவும் பாதி
காவுகொள்ளட்டும் தீ.மீதி

 மண்ணில் விழுந்த மணிகள் ஏராளம்
கண்ணில் நீ விழுந்தாய்...ஏனோ நீதிதேவதையின்
பொன்னான தீர்ப்பு இன்று
பெண்ணான உனக்கு கிடைத்தது

புங்குடுதீவு அன்று புலம்பியது
பூவொன்று கசங்கியது
புழுவாவாய் துடித்திருப்பாய்-நீ-உன்
பூ முகம் காணமல் தாயும் உறவுகளும்


புதருக்குள் வன்புணர்ச்சி-நீ
புழுதியில் மறைந்து போனய்-
புதைகுழியில்  புதைந்துபோனாய்-பல
பூக்களில் புதியதொரு  பூவாய்-இன்று
புயலென எழுந்தாய் நெருப்பாய்.......

புவி முழுதும் புதினங்கள் ஏராளம்-உன்  வன்
புணர்ச்சியால் தகவல்கள் தாராளம்
புல்லறிவு ஜீவன்கள் பல புதிர் பேசியது
புலம்பெயர்ந்தவர்களும் தென்னிலங்கை மக்களும்-உனக்காய்....குரல்
புண்ணியம் செய்தவள் நீ

புதைந்து  போனாலும் நீ
புதையவில்லையே நீதி
புனிதம் பெற்றுவிட்டாய்---நீ
புன்னகை செய்ய முடியவில்லை என்னால்

புறம்போக்கு நாய்கள் பூக்களில் பாயவும்
புன்னகை முகங்கள் குதறப்படவும்-இப்
புவியில் இன்னும் இருக்கும்-காமப்
பூனைகளை கட்டிவைத்து சுடுதீயில்

பத்தொன்பது வயதில் 13-05- 2015ல்
பள்ளிசென்று திரும்புகையில்-உன்னை
படுபாவிகள் பந்தயப்பொருளாக்கி
பரிகாசம் செய்தனரே....

அன்றிலிருந்து 13-05- 2015
 இன்றுவரை 27-09- 2017
பன்னிரெண்டு குற்றவாளிகள்
பதினொன்றாகி பின்  ஒன்பதாகி
இறுதியில் ஏழாகி...41குற்றங்கள்  பதிவாகி
53 சாட்சியங்கள் விவாதங்கள் அரங்கேறி

ரயல் அட்பார் நீதிமன்றம் உருவாகி
03 நீதிபதிகள் கொண்ட குழு தெரிவாகி
07 பேருக்கு எழுதிய தீர்ப்பு தமிழில்
சரியான தீர்ப்புதான் மரணதண்டனை

எனக்கென்னவோ  சந்தேகம் தான்
எப்போது அது நிறைவேறும்
ஏன் என்றால் அதற்குள்-இன்னும்
எத்தனை பூக்கள் கசக்கப்பட்டு
எரிக்கப்படவும் ஏமாற்றப்படவும் கூடுமே...

மேன்முறையீடு என்றால்......சில பேய்கள்

என்னதான் நல்ல தீர்ப்பு
என்றாலும் அதை மக்கள் முன்னிலையில்  வைத்தால்
ஏதுவாக இருக்கும்  இவ்வாறான எழிய செயலை
எவனும் எண்ணித்துணிய மாட்டான்...

பூரணமான தீர்ப்பாய் இருக்கும்
புதிய தீர்ப்பாய் இருக்கும்-நீதி தேவதையும்
புன்னகை செய்வாள் பல பூக்களும்
பூமகள் வித்தியாவின் புனித ஆன்மாவும்  பூரிப்படையும்....

பிறப்பு-25-11-1996
இறப்பு-13-05-2015
இலச்சியக்கனவு-ஊடகவியலாளர்
புங்குடுதிவு யாழ்ப்பாணம்


-கவிஞர்-வை-கஜேந்திரன் -
வித்தியா வித்தாகி இரண்டு வருடங்களின் பின்பு....கவிஞர்-வை-கஜேந்திரன் Reviewed by Author on September 28, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.