அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களுக்குள் தமிழ் மாணவர்கள் இல்லை
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியுள்ள நிலையில், அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் விபரங்கள் நேற்று வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் தேசிய ரீதியில் முதல் 10 இடங்களுக்குள் எந்தவொரு தமிழ் மொழிமூலமான மாணவரும் இடம் பிடிக்கவில்லை என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் நீர்கொழும்பிற்கும், இரண்டாம் இடம் கம்பஹாவிற்கும், மூன்றாம் இடம் கடவத்தைக்கும் சென்றுள்ளது. இதேவேளை நான்காம் இடத்தை195 புள்ளிகளுடன் 12 மாணவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர். முதல் பத்து இடங்களிலும் எந்வொரு தமிழ் மாணவரும் இடம்பிடிக்கவில்லை.
அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களுக்குள் தமிழ் மாணவர்கள் இல்லை
Reviewed by Author
on
October 07, 2017
Rating:

No comments:
Post a Comment