ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய செய்தி
UKயில் வாழும் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் ஐக்கிய இராச்சிய பிரஜைகள் தொடர்பில் முக்கிய முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளதாக UK அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சியம்(UK) ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பது யாவரும் அறிந்த விடயம்.
கடந்தவாரம் நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை பெல்ஜியம் நாட்டு தலைநகர் (Brussels) பிறஸ்ஸிலில் இடம்பெற்றது. இது தொடர்பாக, உள்விவகார அமைச்சு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த மாதம் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், UKயில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் ஐக்கிய இராச்சிய பிரஜைகள் தங்களுடைய வாழ்க்கையை தற்பொழுது உள்ளமாதிரியே கொண்டுசெல்லக் கூடியவகையில் பலவிடயங்கள் மீது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கும், UK நாட்டவர்களுக்கும் கூடுதலான பொருளாதார பாதுகாப்பு வழங்கும் வகையில், சமூக பாதுகாப்பு உரிமைகளை பாதுகாக்கும் விடயங்களில் நல்ல முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. பிரஜைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக, சில சந்தர்ப்பங்களில் நாங்கள் தற்போது நடைமுறையில் உள்ள EU சட்டத்தின் கடுமையான தேவைகளை தாண்டிச் செல்ல வேண்டியுள்ளது.
என UK அரசாங்கம் நினைக்கின்றது. உதாரணமாக, ஐக்கிய இராச்சியத்தில் குடியேறிய EU பிரஜைகள் (Settled Citizens) UKயை விட்டுதிரும்பிச் செல்லும் பட்சத்தில், அவர்கள் திரும்பி வருவதற்குரிய உத்தரவாதத்துடனான உரிமையை (Guaranteed Rights) வழங்க இணங்கியுள்ளது. அதற்குப் பதிலாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளிலும் வாழும் UK நாட்டவர்களுக்கும் தொடர்ச்சியான வசிப்பிட உரிமை (Movement Rights) வழங்கப்பட வேண்டும். இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்பட்டால், Settled Status உடன் உள்ள ஐரோப்பிய பிரஜை ஒருவர் தன்னுடைய தகைமை (status) பாதிக்கப்படாமல் UKயிற்கு வெளியில் 2 வருடத்திற்கு மேல் இருக்கமுடியும். அதற்குப் பதிலாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் UK நாட்டவர் ஒருவர், தற்பொழுது உள்ளது போன்று மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் இடம் மாறமுடியும்.
இந்த துணிவான மற்றும் முக்கியமான சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் கவனமாக கருதும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர் பிரஜைகளின் உரிமையை நடைமுறைப்படுத்துவது (Enforcement of Rights) தொடர்பான விடயத்தில் UK மிகவும் தெளிவாக உள்ளது. அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள ஒரு மூன்றாவது நாடாக UK இருந்து கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதி நீதிமன்றம் (Court of Justice of European Union/CJEU) நேரடி அதிகாரத்தைப் பிரயோக்கிப்பது சரியாக இருக்காது.
இருப்பினும், இது தொடர்பாக எழுப்பப்பட்ட கரிசனைகளை நாங்கள் செவிமடுத்துள்ளோம். பிரதம மந்திரி கடந்த வாரம் Florence எனும் இடத்தில் வழங்கிய உரையின் போது தெரிவித்ததைப் போன்று, UK அரசாங்கம், பின்வாங்கிசெல்லும். இறுதி உடன்படிக்கையில் உள்ள அனைத்து விடயங்களையும் UK சட்டத்திற்குள் உள்ளடக்குவதற்கு முழுமையாக உறுதிசெய்யும். அத்துடன், CJEU உடைய தீர்ப்புக்களை, தொடர்ச்சியான விளக்கங்களை உறுதிசெய்யும் நோக்கில் UK நீதிமன்றங்கள் கருத்தில் எடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
நான்கு கட்ட பேச்சுவார்த்தைகளின் பிறகு, ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தங்களுடைய புதிய குடியுரிமை நிலையை (Settled Status) எவ்வாறு விண்ணப்பிப்பார்கள் என்பது பற்றிய விடயங்களைப் பற்றி பேசுவதற்கு ஆரம்பித்துள்ளோம். UK தற்பொழுது தன்னுடைய ஆரம்ப சிந்தனையை முன்வைத்துள்ளது. UKயில் உள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் தொடர்பில், தற்பொழுது மொழியப்பட்டுள்ள Settlement Scheme of EU Citizens தொடர்பான வடிவமைப்பு மற்றும் அதனை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடும்.
எல்லோராலும் பயன்படுத்தக் கூடிய வகையிலும், அனைவராலும் நெறிப்படுத்தக்கூடிய முறையிலும், நாங்கள் விண்ணப்பங்களை தயாரிப்பதில் உறுதியாக உள்ளோம். உதாரணமாக, ஏற்கனவே நிரந்தர வதிவுரிமை கொண்டவர்கள் இந்த நடைமுறைகளுக்குள் முற்றுமுழுதாக செல்லவேண்டியிருக்காது. ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் ஏற்கனவே எங்களுக்கு வழங்கிய தகவல்களை, தேவைப்படுகின்ற ஆவண அத்தாட்சிகளின் சுமையைக் குறைக்கும் நோக்கத்துடன் நாங்கள் பயன்படுத்துவோம்.
வருகின்ற மாதங்களில் அதிக தகவல்கள் வெளிவரும், ஆனால், தற்பொழுது ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை என அந்தப் பத்திரிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைகள் இம்மாதம் 9ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய செய்தி
Reviewed by Author
on
October 07, 2017
Rating:

No comments:
Post a Comment