நவம்பர் 19 ஆம் திகதி பூமியில் பேரழிவு ஏற்படுமா? நாசா மறுப்பு -
Nibiru என்ற Planet X காரணமாக நவம்பர் 19 ஆம் திகதி பூமியில் பேரழிவு ஏற்படும் என்று வெளியான தகவலை நாசா ஆய்வு மையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
Planet XNews.com என்ற தளத்தில் சமீபகாலமாக நிபுரு கோள் பற்றிய செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன
அதாவது, இந்த நிபுரு கோள் ஒரு கருப்பு நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு வாயுக் கோள் என்றும், நட்சத்திரமாக மாற முயற்சித்து தோல்வியடைந்ததால், அது வாயு கோளாக மாறியது என கூறப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்தில் கடைசியாக இருக்கும் இந்த கோள் சூரியனை சுற்றி வர 3,600 ஆண்டுகள் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது இந்த நிபுரு கோளின் ஈர்ப்பு சக்தி காரணமாக பூமியில் பூகம்பம் ஏற்படுவதும், எரிமலைகள் வெடிப்பதும் அதிகரிக்கும். இறுதியாக வரும் நவம்பர் 19ம் தேதி ‘Armageddon’ என்ற மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் என செய்தி வெளியானது.
இந்த பூகம்பத்தால், பிரான்ஸ், இத்தாலியிலிருந்து அலாஸ்கா மற்றும் ரஷ்யா வரையும், அமெரிக்க மேற்கு கரையோர பகுதியிலும், இந்தோனேஷியா, ஜப்பான் போன்ற பகுதிகளிலும் கோடிக்கணக்கான அளவில் உயிரிழப்பு ஏற்படும் என டெரல் கிராப்ட் என்ற எழுத்தாளர் தெரிவித்தார்.
இந்த தகவலை அமெரிக்காவின் நாசா மையம் முற்றிலும் மறுத்துள்ளது. நிபுரு என்ற கோளே இல்லை. இவை அனைத்தும் வதந்திகள் என்றும் நவம்பர் 19ம் தேதி மிகப் பெரியளவில் பூகம்பம் ஏற்படும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை.
நிபுரு என்ற கோள் உண்மையாக இருந்திருந்தால், அதை விண்வெளி விஞ்ஞானிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்திருப்பர். அர்மஜெட்டான் பூகம்பம் நடக்கப்போவதே இல்லை எனவும் நாசா கூறியுள்ளது.
நவம்பர் 19 ஆம் திகதி பூமியில் பேரழிவு ஏற்படுமா? நாசா மறுப்பு -
Reviewed by Author
on
October 30, 2017
Rating:
Reviewed by Author
on
October 30, 2017
Rating:


No comments:
Post a Comment