அண்மைய செய்திகள்

recent
-

பிரமாண்டமாக நடைபெறும் `2.0' இசை வெளியீட்டு விழாவின் சிறப்பம்சங்கள்: முழுவிவரம்


பிரமாண்டமாக நடைபெற இருக்கும் `2.0' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வருகிற 27-ஆம் தேதி துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

அதுமட்டுமின்றி இப்படத்திற்குப் பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை படக்குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இசை வெளியீட்டிற்கு முன்னதாக வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி மாலை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்ஷ்ய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட 2.0 படக்குழுவினர் தங்கியுள்ள ஹோட்டலில் இருந்து ஹெலிக்காப்டர் மூலமாக உலகின் ஒரே 7 நட்சத்திர ஹோட்டலான Burj- Al - Arab செல்கின்றனர். அங்கு `2.0' படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகில் முக்கிய பத்திரிக்கைகளின் நிருபர்கள் கலந்து கொள்கின்றனர்.



இந்நிகழ்வைத் தொடர்ந்து `2.0' படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி 27-ஆம் தேதி நடைபெறுகிறது.

இசை வெளியீடு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களாக, `2.0' படத்தின் இசை வெளியீடு புர்ஜ் பார்க்கில் நடைபெறுகிறது. முதன் முறையாக இந்த இடத்தில் பிரமாண்ட நிகழ்வு நடத்த துபாய் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

* இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்போனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

* இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், `2.0' படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைக்கவுள்ளார்

* பாஸ்கோ நடனக்குழு சூப்பர்ஸ்டார் ரஜினி - இயக்குநர் ஷங்கர் - இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான பாடல்களுக்கு சிறப்பு நடனவிருந்து அளிக்கவுள்ளனர்.

* 12,000 பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது



* துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூ.2 கோடி செலவில் பிரம்மாண்ட LED அமைக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காண்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றறை லட்சம் பேர் பார்க்கக்கூடும் என்ற கூறப்படுகிறது.

* துபாய் அரசர் இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 உலகமே எதிர்நோக்கும் இந்நிகழ்வைப் பார்க்க பல பிரபலங்கள் துபாய் விரைந்த வண்ணமுள்ளனர்.

* நடிகர் கமல்ஹாசனும் `2.0' இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரமாண்டமாக நடைபெறும் `2.0' இசை வெளியீட்டு விழாவின் சிறப்பம்சங்கள்: முழுவிவரம் Reviewed by Author on October 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.