2 மாத பரோல் முடிந்தது - பேரறிவாளன் இன்று மாலை வேலூர் சிறையில் அடைப்பு
2 மாத பரோல் முடிந்த நிலையில் பேரறிவாளன் ஜோலார் பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று மதியம் 2 மணியளவில் வேலூர் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் திரும்புகிறார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஜோலார் பேட்டையில் வசிக்கும் பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
தந்தையை உடனிருந்து கவனிக்க வேண்டும் என்ற தாய் அற்புதம்மாளின் வேண்டுகோளை ஏற்று கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி ஒரு மாத பரோலில், பல்வேறு நிபந்தனைகளுடன் பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பின்னர் பரோல் முடிவடைய சில நாட்கள் இருந்த நிலையில், மேலும் ஒரு மாத பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், பேரறிவாளனின் பரோல் இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலை 5 மணிக்குள் பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட வேண்டும்.
இதற்கிடையே பேரறிவாளன் தாய் அற்புதம்மாள், கணவர் குயில்தாசன் உடல் நிலையை காரணம் காட்டி மீண்டும் பரோல் நீட்டிப்பு வழங்க வேண்டும் என 3-வது முறையாக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தார். இதனை அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை.
எனவே, இன்று மாலைக்குள் பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்படுகிறார். இதற்காக ஜோலார் பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று மதியம் 2 மணியளவில் வேலூர் சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் திரும்புகிறார். அதன் பிறகு அவர் சிறையில் அடைக்கப்படுகிறார்.

2 மாத பரோல் முடிந்தது - பேரறிவாளன் இன்று மாலை வேலூர் சிறையில் அடைப்பு
Reviewed by Author
on
October 24, 2017
Rating:

No comments:
Post a Comment