அண்மைய செய்திகள்

  
-

மருத்துவ தேவைகளுக்காக எங்களை நாடி வருகின்ற நோயாளர்களின் மனதை நோகடிக்காதீர்கள்-சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்

மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைகளுக்காக செல்லுகின்ற நோயாளர்களுடன் சுகாதார ஊழியர்கள் நடந்து கொள்ளுகின்ற அனுகு முறைகள் தொடர்பில் நோயாளர்களினால் பல்வேறு முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியின் கீழ் மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட குஞ்சுக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் இன்று (24) செவ்வாய்க்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சரின் பிரதி நிதியாக கலந்து கொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் குறித்த நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,

மருத்துவ தேவைகளை நாடி உங்களிடம் வருகின்ற நோயாளர்களுக்கு எவ்வித மருந்துகளாக இருந்தாலும் அவற்றை அவர்களுக்கு வழங்குகின்ற போது அவர்களுடன் நடந்து கொள்ளுகின்ற முறை மகிழ்ச்சிகரமானதாக இருந்தால் அந்த நடவடிக்கை உங்களையும் மகிழ்விக்கும்,இவ் வைத்தியசாலையை அமைத்து சகல வசதிகளையும் மேற்கொண்டு தந்த அனைவருக்கும் நிம்மதியையும், நற்பெயரையும் தரும்.

பல்வேறு இடங்களில் இருந்து நோயாளர்களினால் வருகின்ற முறைப்பாடு சுகாதார ஊழியர்களின் அனுகு முறை தொடர்பில்.நான் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை.

சாதாரண ஊழியர்களில் இருந்து உயர் நிலையில் உள்ளவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கின்றது.

உண்மையிலே சில வைத்தியசாலைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றது.

அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

நாங்கள் பெற்றுக்கொள்ளுகின்ற ஊதியம் நாங்கள் செய்கின்ற சேவைக்காகத்தான்.

எனவே எங்களை நாடிவருகின்ற நோயாளர்களின் மனதை நோகடிக்காத வகையில் நடந்து கொள்ளுவீர்கள் என நான் நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து வங்காலை கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வங்காலை பிரதேச வைத்தியசாலையின் வெளி நோயாளர் விடுதி, அடம்பன் மற்று விடத்தல் தீவு பிரதேச வைத்தியசாலைகளுக்கான உத்தியோகத்தர்கள் தங்குமிட விடுதி ஆகியவை அமைச்சரினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவ தேவைகளுக்காக எங்களை நாடி வருகின்ற நோயாளர்களின் மனதை நோகடிக்காதீர்கள்-சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் Reviewed by NEWMANNAR on October 24, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.