மன்னார் கட்டையடம்பன் றோ.க.த.க பாடசாலை மாணவன் செல்வன் ஞானசேகர் மெல்கிதன் மாவட்ட ரீதியில் 2ம் இடம்....
2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி மன்னார் மாவட்டத்தில்
மன்னார் கட்டையடம்பன் றோ.க.த.க பாடசாலை மாணவன் செல்வன் ஞானசேகர் மெல்கிதன் மாவட்ட ரீதியில் 2ம் இடத்தினையும் மடுவலையத்தில் 01ம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
பெற்றோராகிய தந்தை சண்முகம் ஞான்சேகர் அவர்களிடமும் தாய் ஞானசேகர் அகிலா அவர்களிடமும் கேட்டபோது
நன்கு படிப்பான் காலையில் 05மணிக்கு எழுப்பி விடுவேன் பின்பு பாடசாலைப்படிப்புதான் அத்தோடு பாடசாலையில் மாலைநேர படிப்பு மதுரன் ஆசிரியர் அவர்கள் பலவகையான பயிற்சிகள் மூலம் நல்ல முறையில் கற்பித்தார் அத்தோடு எனது மகனுக்கு நல்ல முறையில் கிரகித்துக்கொள்வான் சித்தியடைவான் என்று தெரியும் ஆனால் மன்னார் மாவட்டத்தில் 02ம் இடத்தினைப்பெறுவான் என நாங்கள் நினைக்கவில்லை இப்போது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி கூறிநிற்கின்றோம்
நாயகன் செல்வன் ஞனசேகர் மெல்கிதன்உங்களது எதிர்கால இலக்கு என்ன எனவினாவியபோது
அடுத்த நொடியே நான் பாதர் ஆகவருவேன்
என்றார் ஏன் என்று கேட்கவும் ----மக்கள் மத்தியில் அமைதியும் சமாதனமும் நம்பிக்கையும் உருவாக்க வேண்டும் என்றார் நீங்கள் பரீட்சைக்கு எவ்வாறு படித்தீர்கள் நான் காலையில் 05 மணிக்கு எழும்பிப்படிப்பேன் பாடசாலையில் மதுரன் ஆசிரியர் மிகவும் நல்ல முறையில் கற்றுத்தந்தார் கொஞ்சநாட்கள் மாதங்கினி ஆசிரியரும் கற்றுத்தந்தார்.
என்னைப்போல் விரும்பி ஆர்வமாகப்படித்தால் எனிபரீட்சை எழுதவிருக்கும் எல்லாமணவர்களும் சித்தியடையலாம் எனது வெற்றிக்கு காரணமான பெற்றோர் மற்றும் ஆசிரியர்களான மதுரன் மாதங்கினி அதிபர் மரியலூர்தாகரன் அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன் என்னை வழிநடத்தும் இறைவனையும்.
பாடசாலை அதிபர் அவர்களிடம் கேட்டபோது
எமது பாடசாலையில் இருந்து இம்மாண்வன் மன்னார் மாவட்ட ரீதியில் 02ம் இடத்தினையும் மடுவலையத்தில் 01ம் இடத்தினையும் பெற்றுள்ளான் மிகவும் மகிழ்ச்சியான விடையம் மாணவன் மிகவும் அமைதியாகவும் படிப்பில் கவனத்துடனும் செயற்படுவான் அவனது பெற்றோர்களும் சமூகத்திலும் பாடசாலை விடையங்களிலும் அக்றையுடன் செயற்படுபவர்கள்
எமது பாடசாலை பேதிய பௌதீகவளங்கள் இல்லாதபாடசாலையாக இருந்தாலும் இப்படியான மாணவர்களின் திறமையால் பெருமைகொள்கின்றோம் கடந்தாண்டும் இரண்டு மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் இவ்வாண்டு அதிதிறமைச்சித்தி மகிழ்ச்சியளிக்கின்றது;
கடினமாக உழைத்த ஆசிரியர் பெற்றோர் குறிப்பாக பாடசாலையின் பெருமை சேர்த்த மாணவன் மெல்கிதனையும் மாணவி N.தட்சாயினி புள்ளி- 153 அனைவரையும் பாராட்டி மகிழ்கின்றேன்.
உண்மை விளங்குகின்றது.
குறித்த மாணவக்கு பாடசாலைக்கல்வியுடன் மாலையில் பாடசாலையில் வகுப்பு அவ்வளவுதான் நகரப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவமாணவிகளைப்போன்று சிறப்பான வகுப்புகளோ.... விசேட கருத்தரங்குகளோ.... மேலதிக வகுப்புக்களோ..... கிடையாது பாடசாலை ஆசிரியரின் கற்றல் மட்டும் தான் அந்தக்கல்வியினை நன்கு கிரகித்து புரிந்துபடித்ததால் கிராமப்புறங்களில் இருக்கும் பாடசாலை மாணவர்கள் நகர்புறங்களில் உள்ள தேசிய பாடசாலை மாணவர்களை விட சிறப்பாக சாதிக்கின்றார்கள் என்றால் கிராமப்புற மாணவர்கள் தங்களிலும் தங்களுடைய பாடசாலையிலும் மிகுந்த மதிப்பு வத்துள்ளார்கள் என்பது தானே உண்மை
மன்னார் மாவட்டத்தின் பெருமையை நிலைநாட்டுகின்ற மாணவச்செல்வங்களினையும் அவர்களுக்கும் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கும் அதிபர் அவர்களுக்கும் உறுதுணையாக இருக்கும் பெற்றோர் பாடசாலைச்சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்;
தொகுப்பு-வை-கஜேந்திரன்-
மன்னார் கட்டையடம்பன் றோ.க.த.க பாடசாலை மாணவன் செல்வன் ஞானசேகர் மெல்கிதன் மாவட்ட ரீதியில் 2ம் இடம்....
Reviewed by Author
on
October 05, 2017
Rating:

No comments:
Post a Comment