விஞ்ஞானியாக வந்து பல்வேறு சாதனைகளை நிலை நாட்ட வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம்-மாணவன் அபிசேக்
எதிர்காலத்தில் ஒரு விஞ்ஞானியாக வந்து பல்வேறு சாதனைகளை நிலை நாட்ட வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் 191 புள்ளிகளைப்பெற்று மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற மன்னார்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் குபேரகுமார் நயோலன் அபிசேக் தெரிவித்தார்.
அண்மையில் இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையின் முடிவுகள் நேற்று புதன் கிழமை(4) இரவு வெளியாகியது.
இதன் போது மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் குபேரகுமார் நயோலன் அபிசேக் 191 புள்ளிகளைப்பெற்று மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
குறித்த மாணவன் மேலும் தெரிவிக்கையில்,,,
என்னை புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதல் இடம் பெறுவதற்கு சித்தம் கொண்ட இறைவனுக்கு முதலில் நன்றிகளை கூறுகின்றேன்.
எனது பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் றெஜினோல்ட் (எப்.எஸ்.சி) அவர்களுக்கும், பிரதி அதிபர்கள்,பகுதித்தலைவர்கள் அனைவருக்கும் நானும், எனது குடும்பமும் மனம் நிறைந்த நன்றிகளை கூறிக்கொள்ளுகின்றோம்.
விசேடமாக எனக்கு தாய் போல இருந்து எனது பலம், பலவீனங்களை அறிந்து எனது நலன்களில் முழு அக்கறை கொண்டு இரவு பகல் பாராது எங்களுக்கு கற்பித்து இன்று நான் முதல் இடம் பெற மணி மகுடமாக அமைந்த அன்பிற்குரிய வகுப்பாசிரியர் திருமதி சுதராஜா பிறேமிளா அவர்களுக்கு எனது குடும்பமும் நானும் இதய பூர்வமான நன்றிகளும்,ஆசிரியர் தின நல் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றோம்.
-எனக்கு ஊக்கமளித்து இந்த நிலையை அடைய உறுதுணையாக இருந்து எனக்கு கற்பித்து ஆசிகள் வழங்கிய ஆசிரியர் பத்மராஜ் அவர்களுக்கும்,இன்னும் நான் இந்த உயர்வை அடைய உதவிய ஏனைய ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
-எனது வளர்ச்சியில் அடிக்கல்லாக விளங்கிய எனது ஆராம்பப் பாடசாலையான ஜோசப்மாஸ்டர் ஞாபகர்த்த ஆங்கில பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,அருட்சகோதரி கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.மேலும் நான் முதல் நிலை அடைய என்னைப் பலப்படுத்தி,திடப்படுத்தி உருவாக்கிய எனது அன்பு பெற்றோர்களுக்கு பணிவான நன்றிகளை கூறிக்கொள்ளுகின்றேன்.
-எனது எதிர்கால இலட்சியமாக ஒரு விஞ்ஞானியாக வந்து பல்வேறு சாதனைகளை நிலை நாட்ட வேண்டும் என்பதே.என புலமைப்பரிசில் பரிட்சையில் 191 புள்ளிகளைப்பெற்று மன்னார் மாவட்டத்தில் முதலிடத்தை பெற்ற மன்னார்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் குபேரகுமார் நயோலன் அபிசேக் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
October 05, 2017
Rating:
No comments:
Post a Comment