இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கிய இலங்கை: பகல்-இரவு போட்டியில் சிறப்பான துவக்கம்
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
பகல்-இரவு போட்டியான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய கருணாரத்னே, குசல் சில்வா சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.
முதல் விக்கெட்டிற்கு 63 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், சில்வா 27 ஓட்டங்களுடன் வெளியேற, கருணாரத்னேவும், சமரவிக்ரமாவும் சிறப்பாக ஆடி வருகின்றனர்.
சற்று முன் வரை இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 103 ஓட்டங்கள் எடுத்து வலுவாக ஆடி வருகிறது. கருணாரத்னே அரைசதம் கடந்து 56 ஓட்டங்கள் குவித்து ஆடி வருகிறார்.
இரண்டு மாற்றங்களுடன் களமிறங்கிய இலங்கை: பகல்-இரவு போட்டியில் சிறப்பான துவக்கம்
Reviewed by Author
on
October 07, 2017
Rating:

No comments:
Post a Comment