மன்னார் தேர்தல் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எஸ். சூசைதாசன் 83 ஆவது வயதில் காலமானார்.(படம்)
மன்னார் தேர்தல் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எஸ். சூசைதாசன் சோசை தனது 83 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை(13) மாலை காலமானார்.
திடீர் சுகயீனம் காரணமாக அனுராதபுரம் வைத்திய சலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உயிரிழந்துள்ளார்.
மன்னார் மாவட்டம் வங்காலை கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ். சூசைதாசன் சோசை தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளராக மன்னார் தொகுதியில் 1977 ஆம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, 15,141 வாக்குகள் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானார்.
ஆறாம் திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு யூ10லை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3 ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தை ஒன்றி யொதுக்கல் செய்தார்கள்.
மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், மன்னார் தேர்தல் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான பி.எஸ்.சூசைதாசன் சோசை 1983 அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி மன்னார்த் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்.
மன்னார் தேர்தல் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எஸ். சூசைதாசன் 83 ஆவது வயதில் காலமானார்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
October 14, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 14, 2017
Rating:


No comments:
Post a Comment