போர் விட்டுப்போன பின்பு......வாள் வெட்டு..........தமிழ்மாடு
போர் விட்டுப்போன பின்பு.....
போர் விட்டுப்போன பின்பு
வாள் வெட்டு.......... ஆரம்பம்
யார் வீட்டுப்பிள்ளைகள்-தமிழ்
பேர் கெட்டு போகும் வீரர்கள்
பார் போற்றும் பூமியில்
தேர் சுற்றும் வீதியில்
ஏர் பிடித்த கைகளில்-வாளை
யார் கொடுத்தது...எமது இளைஞர்களை
யார் கெடுத்தது......
வெளிநாட்டுப்பணமா........
வெறியர்களின் குணமா..........
வெள்ளைச்சாமிகளின் மனமா........
வெள்ளரசு இனமா,,,,,,,,,,,,,
வெளிநாட்டு ஆசாமிகளா,,,,,,,,
வெள்ளைச்சாமிகளா,,,,,,,,,
உள்ளூர் விஷமிகளா,,,,,,,,,
முன்னாள் ஆமிகளா,,,,,,,,,,
மோர் குடித்த வாயில்
வீர் கொடுத்து கார் கொடுத்து
பேர் விளங்க எழுதுகோள் இருந்த கையில்
யார் வாள் கொடுத்தது......
மது அருந்தி
தெருவில் குந்தி-தமிழர்
குருதி சிந்தி--வாழும் வாழ்க்கை
சிந்தி இளைஞனே....
பிஞ்சு வயசில்
வாயில் கஞ்சா
பையில் காசு தூஷணம் பேசும்
கையில் வாளோடு- சினிமாவைப்போல
பஞ்சமில்லாமல் பாதகச்செயல்கள்....
கொஞ்சம் சிந்தியுங்கள் இளைஞர்களே
கெஞ்சிக்கேட்கிறேன் ஐயோஇஇஇநெஞ்சு வலிக்கிறது
பஞ்சம் பிழைக்க வந்தவர்களிடம்
தஞ்சம் புகுந்து கொண்டு....
ஐந்துக்கும் பத்துக்கும் ஐயோஇஇஇஐயோ...
தரணி போற்ற தமிழுணர்வோடு இருந்த வீரம்
புறணி பேசுமளவுக்குபோகின்றதே தமிழர் தரம்
பரணி பாடிய தமிழர் பாரம்பரியம்---இளைஞனே
பார் நீ ...சிந்தித்துப்பார் நீ...
நீண்ட நெடிய வரலாறு
கொண்டு வாகைசூடிய வெற்றிகள் பல நூறு
கொடிய செயலால் மாண்டு
மடிகின்றதே எமது இளைய தலைமுறை
தலையில்லா உடல் போல
விலையில் பொருள் போல
மாற்றானுடன் கைகோர்த்து
மார்பு தட்டும் மானத்தலைவர்களே
மனம் குரங்காய் பாயும்போது
மானம் சிரங்காய் தேயும் போது-தமிழ்
இனம் மெல்ல அழியும் போது..
குணம்மாறி பணத்துக்காய்
குருட்டுப்பூனை போல—
இருட்டுக்குள் இருக்கும் உங்களையா
இனியும் நாம் நம்பிக்கொண்டு…
இளையதலைமறை வெம்பிக்கொண்டு….
யாழ்….முல்லை-கிளி-வவுனியா-
வாள்….
யாரால்….
வடக்கில்…..
இதயக்கனவுகளில் இருள்விலகும்
இறைவன் அருள் அழகும் இனிமையாய்
இந்த உலகும் காணும்-எங்கள் தமிழர்
ஈழம் மலரும்…..
-தமிழ்மாடு-
போர் விட்டுப்போன பின்பு......வாள் வெட்டு..........தமிழ்மாடு
Reviewed by Author
on
October 14, 2017
Rating:
Reviewed by Author
on
October 14, 2017
Rating:


No comments:
Post a Comment