நான் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை: மேயாத மான் பிரியா
கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்த பிரியா பவனி ஷங்கர் தற்போது மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்துவைத்துள்ளார்.
முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்ட அவருக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அடுத்து விஜய் சேதுபதியுடன் ஜூங்கா, கார்த்தியுடன் மற்றொரு படத்திலும் அவர் கமிட்டாகியுள்ளார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் "நான் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை" என தெரிவித்துள்ளார். "ரசிகர்களிடமிருந்து இப்படி ஒரு ரெஸ்பான்ஸை நான் எதிர்பார்க்கவில்லை. மேயாத மான் படத்தை கார்த்திக் சுப்பாராஜ் தயாரிக்கிறார் என்ற ஒரே காரணத்தால் தான் ஒப்புக்கொண்டேன். பல நல்ல நடிகர்கள் இந்த படத்தில் நடிக்கவிருந்தனர், அதனால் இந்த வாய்ப்பை மிஸ் செய்ய விரும்பாமல் ஏற்றுக்கொண்டேன்."
"பெண்களை கொச்சைப்படுத்தாமல் உள்ள படங்களில் மட்டுமே நான் நடிப்பேன். நான் ஹீரோயின் மெட்டிரியல் கிடையாது. மற்றவர்களை போல நானும் ஒரு சாதாரண பெண் தான். நடிப்பு திறமையை காட்டவே விரும்புகிறேன், கிளாமறாக நடிக்கமாட்டேன்," என தெரிவித்துள்ளார்.
நான் ஹீரோயின் மெட்டீரியல் இல்லை: மேயாத மான் பிரியா
Reviewed by Author
on
October 30, 2017
Rating:
Reviewed by Author
on
October 30, 2017
Rating:


No comments:
Post a Comment