அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்கள் பேரவையால் - இடைக்கால அறிக்கை முற்றாக நிராகரிப்பு


இலங்கை அரசமைப்பு சபையின் வழிப்படுத்தல் குழுவின் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான இடைக்கால அறிக்கை தமிழ் மக்களின் நீண்ட கால உரிமைப் போராட்டத்திற்கு தீர்வாக அமையாது.

எனவே இந்த இடைக்கால அறிக்கையை தமிழ் மக்கள் பேரவை நிராகரிக்கிறது என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் மக்கள் பேர வையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்த் தேசிய பிரச்சினைக் கான தீர்வு என்ன என்பது தமிழர் தரப்பால் தெளிவாக முன்வைக்கப் பட்டிருக்கவில்லை என்ற ஒரு பொதுவான சர்வதேசக் குற்றச் சாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தமிழ்த் தேசிய இறையாண்மை பிரச்சினைக்கான தீர்வினை தீர்க் கமாக  வெளிப்படுத்தும் ஒருவரைபை  உருவாக்குவதற்காகத் தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் உபகுழுவை கடந்த 2016 ஆம் ஆண்டு தை மாதம் நிறுவியது.

நீண்ட அமர்வுகளின் அரசாங்கம் வெளியிட்ட இடைக்கால அறிக்கை, மத்திய மாகாண சபையில் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

நேற்றுக் கூடிய மாகாண சபை அமர்வில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து மாகாண சபையில் பதற்ற நிலை ஏற்பட்டது. மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணியினர் இச் செயலை செய்துள்ளனர்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பான இடைக்கால அறிக்கையில், பௌத்தத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் சமஷ்டிக்கு வழிகோலும் வகையிலும் சில உள்ளடக்கங்கள் காணப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, நாட்டை பிளவுபடுத்தும் வகையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு வரவதாகவும், குறித்த அரசியல் யாப்பு நாடாளுமன்றிற்கு கொண்டுவரப்படுமாயின் அதனை தீயிட்டு எரிப்போம் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.                                            


தமிழ் மக்கள் பேரவையால் - இடைக்கால அறிக்கை முற்றாக நிராகரிப்பு Reviewed by Author on October 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.