ஆஸி.யில் புகலிடம் மறுக்கப்பட்ட 197 பேரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!
அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு நவுறு, பபுவா நியூகினி, கிறிஸ்மஸ்தீவு, அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 197 இலங்கையர்களை மீண்டும் கொழும்புக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன,“சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா சென்று அங்கு புகலிடம் நிராகரிக்கப்பட்ட 197 இலங்கையர்கள் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கிறிஸ்மஸ் தீவில் 12 பேரும், பபுவா நியூகினியில் 21 பேரும், அவுஸ்திரேலியாவில் 70 பேரும், நவுறு தீவில் 94 பேருமாக, மொத்தம் 197 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ளனர்.
அவுஸ்ரேலிய குடியுரிமைக்கு தகைமை பெறாத – தடுப்பு முகாம்களில் உள்ள இலங்கையர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவர்கள் இலங்கையர்கள் என்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு சிறிது காலம் தேவைப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
ஆஸி.யில் புகலிடம் மறுக்கப்பட்ட 197 பேரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!
Reviewed by Author
on
November 19, 2017
Rating:

No comments:
Post a Comment