உலகில் எந்த பணியில் இருப்பவருக்கு அதிக சம்பளம் அளிக்க வேண்டும்? அழகியின் அசத்தலான பதில் -
இந்தியாவைச் சேர்ந்த 20 வயதாகும் மானுஷி சில்லர், 2017-ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை வென்றுள்ளார்.
இதற்கு முன்பு, 2000ஆம் ஆண்டில், பிரியங்கா சோப்ரா இந்த பட்டத்தை வென்றார், பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய பெண் ஒருவர் உலக அழகி பட்டம் வென்றுள்ளார்.
போட்டியின் கடைசி கேள்வியாக, எந்த பணியில் ஈடுபடுபவருக்கு உலகின் அதிகமான வருமானம் அளிக்க வேண்டும், எதற்காக அவ்வாறு அளிக்க வேண்டும் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த மனிஷா சில்லர், "என்னுடைய மிகப்பெரிய உத்வேகம் என் தாயார் தான். அம்மாவாக இருப்பதே சிறந்த பணி. ஆனால், அவர்களுக்கு பணமாக இல்லாமல், அன்பு மற்றும் மரியாதையாக நாம் சம்பளத்தை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலகில் எந்த பணியில் இருப்பவருக்கு அதிக சம்பளம் அளிக்க வேண்டும்? அழகியின் அசத்தலான பதில் -
Reviewed by Author
on
November 19, 2017
Rating:

No comments:
Post a Comment