மன்னார் நகரசபையினால் 20 முன்பள்ளிகளுக்கு போசாக்கு உணவு பொதிகள் வழங்கி வைப்பு....
மன்னார் நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கும் பின்தங்கிய முன்பள்ளிகளின் சிறார்களுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம் -2017
வருடாவருடம் வழங்குகின்ற இத்திட்டமானது இம்முறையும்....
• மன்னார் நகரசபையின் 2017ம் ஆண்டிற்கானபாதீட்டில் போசாக்குத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டின்கீழ் மேற்படி நிகழ்வானது 10.11.2017 பி.ப 1.30 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் நகரசபைச் செயலாளர் திரு.X.L.றெனால்ட் தலைமையில் நடைபெற்றது.
- இத்திட்டமானது மன்னார் வலயக் கல்விப்பணிமனை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை என்பவற்றுடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
- நகரசபை எல்லைக்குட்பட்ட 20 முன்பள்ளிகளைச் சேர்ந்த 595 முன்பள்ளிச் சிறார்கள் பயன் பெறுகின்றனர்.
• இதற்கான நிகழ்வில் சமபோசா மற்றும் சீனிப் பொதிகள் முன்பள்ளி ஆசிரியர்களிடம் கையளிக்கப்பட்டன
- அவை ஒவ்வொன்றும் 500 கிராம் நிறையுடைய 1665 சமபோசாபொதிகளும் (மொத்தநிறை -832.5kg)
- ஒவ்வொன்றும் 500கிராம் நிறையுடைய 425.சீனி( மொத்தநிறை-212.5kg)
• இதற்குமொத்தமாகரூ. 250 000.00 (இருநூற்று ஐம்பதாயிரம்) செலவுசெய்யப்படடுள்ளது.
மன்னார் நகரசபையினால் 20 முன்பள்ளிகளுக்கு போசாக்கு உணவு பொதிகள் வழங்கி வைப்பு....
Reviewed by Author
on
November 17, 2017
Rating:

No comments:
Post a Comment