மன்னார் பொன்தீவு கண்டல் பங்கைச் சேர்ந்த 22 இளைஞர்,யுவதிகளுக்கு உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனம் வழங்கி வைப்பு-(படம்)
மன்னார் மறை மாவட்டம் பொன்தீவு கண்டல் பங்கைச் சேர்ந்த 22 இளைஞர் ,யுவதிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை-12-11--2017உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனம் வழங்கி வைக்கப்பட்டது.
பொன்தீவு கண்டல் புனித அந்தோனியார் ஆலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அருட்தந்தை லோரன்ஸ் அடிகளார் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இதன் போது பொன்தீவு கண்டல் பங்கைச் சேர்ந்த 22 இளைஞர்,யுவதிகளுக்கு மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம் பிள்ளை ஆண்டகை அவர்களினால் உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பொன்தீவு கண்டல் பங்கைச் சேர்ந்த 22 இளைஞர்,யுவதிகளுக்கு உறுதிப்பூசுதல் எனும் திருவருட்சாதனம் வழங்கி வைப்பு-(படம்)
Reviewed by Author
on
November 13, 2017
Rating:

No comments:
Post a Comment