தமிழ் இளைஞர்கள் மீது கொடூர சித்திரவதைகள்! புகைப்படங்களை வெளியிட்ட சர்வதேச ஊடகம் -
நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ்கள் மீதான சித்திரவதைகள் தொடர்வதாக அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்று ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது.
வெளிநாடுகளில் புகலிடம் கோரியுள்ள இலங்கை தமிழர்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த விடயம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இலங்கையில் சித்திரவதைக்கு உள்ளான தமிழ் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள வடுக்களையும், காயங்களையும் ஏபி செய்தி நிறுவனம் தற்போது புகைப்படங்களாக வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்த தமிழ் இளைஞர்கள் வழங்கிய வாக்கு மூலம் அடங்கிய காணொளி ஒன்றை ஏபி செய்தி நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் இளைஞர்கள் மீது கொடூர சித்திரவதைகள்! புகைப்படங்களை வெளியிட்ட சர்வதேச ஊடகம் -
Reviewed by Author
on
November 14, 2017
Rating:

No comments:
Post a Comment