அண்மைய செய்திகள்

recent
-

வயிற்றில் இருந்த 639 ஆணிகள்... மருத்துவர்களை அதிர வைத்த நோயாளி! -


கொல்கத்தாவில் வயிற்று வலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளியின் வயிற்றிலிருந்து 639 ஆணிகள் எடுக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவின் வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்கைசோபிரீனியா எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நோயின் பாதிப்பினால் அவர் ஆணிகள் மற்றும் மண் ஆகியவற்றை வெகு நாட்களாக உண்டு வந்துள்ளார். இதன் விளைவாக கடும் வயிற்று வலிக்கு ஆளான அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    எக்ஸ்ரே பரிசோதனையில் அவர் வயிற்றினுள் ஆணிகள் இருப்பது தெரியவந்ததால் உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

    ஒருமணி நேரம் 45 நிமிடங்கள் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் முடிவில் நோயாளின் வயிற்றில் இருந்து 2.5 இன்ச் அளவுள்ள 639 ஆணிகள் எடுக்கப்பட்டது. தற்போது நோயாளி நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வயிற்றில் இருந்த 639 ஆணிகள்... மருத்துவர்களை அதிர வைத்த நோயாளி! - Reviewed by Author on November 01, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.