அரசியல் கைதி ஒருவரின் உடல் நிலை மோசம்....
அநுராதபுரத்தில் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெ டுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரது உடல் நிலை மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாகவே அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் அவர் நேற்றுச் சேர்க்கப்பட்டார்.
வழக்கை இடமாற்றுமாறு கோரி செப்ரெம்பர் மாதம் 25ஆம் திகதியிலிருந்து கடந்த 37 நாள்களாக 3 தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களில் இ.திருவருள் மற்றும் க.தர்சன் இருவரும் அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. உணவு ஒறுப்புப் போராட்டத்தால் பலவீனப்பட்டுள்ள அவர்களுக்கு சேலைன் மற்றும் ஊக்க மருந்துகள் ஏற்பட்டுவந்தன.
இந்த நிலையில் இ.திருவருளின் உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து அவர் உடனடியாக அநுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
ம.சுலக்சன், அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ந்தும் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
அரசியல் கைதி ஒருவரின் உடல் நிலை மோசம்....
Reviewed by Author
on
November 01, 2017
Rating:

No comments:
Post a Comment