அண்மைய செய்திகள்

recent
-

மூளையின் செயற்பாடுகளை பதிவு செய்யும் அதி நவீன கருவி -


பல்வேறு ஆய்வுகளின் ஊடாக மூளையின் செயற்பாடு தொடர்பான பல்வேறு தகவல்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுவரை கண்டுபிடிக்க முடியாது. மேலும் தகவல்களை வெளிக்கொணரக்கூடிய புதிய கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Neuropixels எனும் குறித்த சாதனம் மூளையின் உள்ளக செயற்பாடுகள் தொடர்பில் நுணுக்கமான தகவல்களை பதிவு செய்கின்றது. இதன் மூலம் இதுவரை விடை காண முடியாத நோய்களுள் ஒன்றான அல்ஸைமர் நோய் தொடர்பிலும் புதிய தகவல்கள் பலவற்றினை பெற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்னர்.

 இதனை ஐக்கிய இராச்சியத்திலுள்ள University College London விஞ்ஞானிகளே உருவாக்கியுள்ளனர். இதுவரை காலமும் மூளை நரம்புத் தொகுதியின் ஒரு பகுதியில் உள்ள தொழிற்பாடுகள் அல்லது தொழிற்பாடுகளின் வடிவங்களை தனித்தனியாக மட்டுமே ஆய்வு செய்ய முடிந்தது. ஆனால் இப் புதிய கருவியின் ஊடாக இவ்விரு செயற்பாடுகளையும் ஒரே தடவையில் செய்துகொள்ள முடியும்.

மூளையின் செயற்பாடுகளை பதிவு செய்யும் அதி நவீன கருவி - Reviewed by Author on November 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.