இப்படியும் ஒரு உலக சாதனை! வியக்க வைத்த டுபாய் பொலிஸார் -
302 டன் எடையுள்ள ஏர்பஸ் A380 விமானத்தை கைகளால் இழுத்துச் சென்று டுபாய் பொலிஸார் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளனர்.
உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் டுபாயில் #dubaifitnesschallenge என்ற ஹேஸ்டேக்குடன் தங்களது உடற்பயிற்சி மற்றும் பலத்தை வெளிப்படுத்தும் செயல்களை பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டுபாயில் பொலிஸார் 302 டன் எடையுள்ள ஏர்பஸ் நிறுவனத்தின் A380 ரக விமானத்தை கைகளால் இழுத்துச் சென்று உலக சாதனை படைத்துள்ளனர்.
இதுதொடர்பான காணொளியை தங்களது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் டுபாய் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இது ஒரே வாரத்தில் தாங்கள் நிகழ்த்தியுள்ள இரண்டாவது உலக சாதனை என்று அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியும் ஒரு உலக சாதனை! வியக்க வைத்த டுபாய் பொலிஸார் -
Reviewed by Author
on
November 11, 2017
Rating:

No comments:
Post a Comment