மன்னார் ஆயரை அவசரமாக சந்திக்கும் கூட்டமைப்பின் தலைமைகள்! -
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சரி செய்யும் முயற்சியில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அப்போஸ்தலிக்க ஆண்டகை நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு மன்னார் ஆயர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி, நாளை மாலை 3 மணிக்கு மன்னாரில் இடம்பெறும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதை கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் நான்கும் உறுதிசெய்துள்ளன.
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் அதன் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
ரெலோ சார்பில் அதன் செயலாளர் சட்டத்தரணி என்.சிறிகாந்தாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநோநோக ராதலிங்கம் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மை காலமாக பிரச்சினைகள் தலைதூக்கியுள்ள நிலையில், அதனை சரி செய்ய பலரும் முனைப்பு காட்டியுள்ளனர்.
அந்த வகையில், கொழும்பிலிருந்து சில புத்திஜீவிகளும், அமைப்புகளும் மன்னார் அப்போஸ்தலிக்க பரிபாலருடன் தொடர்புகொண்டு விடுத்த கோரிக்கையில் அடிப்படையில் இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் ஆயரை அவசரமாக சந்திக்கும் கூட்டமைப்பின் தலைமைகள்! -
Reviewed by Author
on
November 11, 2017
Rating:

No comments:
Post a Comment