புதுயுகம் படைப்போம்: ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு
வேளை வருமெனத் தவமிருக்காது காலையிலையே புதுயுகம் செய்வோம் என்று நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் கடந்த மூன்று மாத காலமாக டுவிட்டரில் அரசியல் குறித்த கருத்துகளை தெரிவித்துவருகிறார். மட்டுமின்றி, அவர் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அதனால், அவர் பிறந்தநாளான நவம்பர் 7-ம் திகதி அரசியல் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் செயலி மட்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பின்போது, தனது பிறந்தநாளுக்கு கேட் வெட்டுவதை விட, கால்வாய் வெட்டுவதே சிறந்தது என்று குறிப்பிட்டார்.
தற்போது, தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், நாளை நான் பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்ததை அன்புடன் கடிந்து கொண்ட நண்பர்களுக்கு என்று குறிப்பிட்டு,
'நாளை என்பது மற்றொரு நாளே, வேலை கிடக்குது ஆயிரமிங்கே, கோலையுங் குடியையும் உயரச்செய்வோம். வேளை வருமெனத் தவமிருக்காது காலையிலேயே புதுயுகம் செய்வோம்' என்று பதிவிட்டுள்ளார்.
புதுயுகம் படைப்போம்: ரசிகர்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு
Reviewed by Author
on
November 07, 2017
Rating:
Reviewed by Author
on
November 07, 2017
Rating:


No comments:
Post a Comment