இலங்கையில் சித்திரவதைக் கூடங்கள் : விசாரணை நடத்தும் ஐ.நா பிரதிநிதிகள்
சித்திரவதைக் கூடங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம் திகதி ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக கொழும்பு நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினர் தமிழர்களை முகாம்களில் தடுத்து வைத்து சித்திரவதைக்கு உட்படுத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
சித்திரவதைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி யஸ்மீன் சூகா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இலங்கையில் சித்திரவதைக் கூடங்கள் : விசாரணை நடத்தும் ஐ.நா பிரதிநிதிகள்
Reviewed by Author
on
November 23, 2017
Rating:

No comments:
Post a Comment