இலங்கையில் 14 ஆயிரம் சிறுவர்களின் நிலைமை....! - ஐ.நா. நடவடிக்கை குழு வெளியிட்ட தகவல் -
இலங்கையில் 14 ஆயிரம் சிறுவர்கள் பராமரிப்பு நிலையங்களில் வாழ்ந்து வருவதாக தன்னிச்சையான தடுப்புகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நடவடிக்கை குழுத் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த தன்னிச்சையான தடுப்புகள் தொடர்பான ஐ.நா குழு கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் இதனை கூறியுள்ளது.
18 வயதுக்கு உட்பட்ட ஆண் மற்றும் பெண் சிறுவர்களான குறித்த 14 ஆயிரம் பேரும் 425 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வாழ்கின்றனர்.
இவற்றுள் 26 சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அவர்கள் தொடர்பில் உடனடி மறுசீரமைப்புகள் அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் 14 ஆயிரம் சிறுவர்களின் நிலைமை....! - ஐ.நா. நடவடிக்கை குழு வெளியிட்ட தகவல் -
Reviewed by Author
on
December 18, 2017
Rating:

No comments:
Post a Comment