31 ஆயிரம் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை!
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 31000 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரால் எம்.நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக ஒருவர் 3 லட்சம் ரூபாய் பணமும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு தலா 50000 ரூபாய் பணம் செலுத்த வேண்டும்.
இரட்டை குடியுரிமை பெற்றுக்கொள்ளும் விண்ணப்பங்கள் பாரிய அளவில் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விண்ணப்பங்களை பரிசோதித்து பொருத்தமானவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
31 ஆயிரம் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை!
Reviewed by Author
on
December 22, 2017
Rating:

No comments:
Post a Comment