அண்மைய செய்திகள்

recent
-

45 நாட்களில் உலகை சுற்றி வந்து சாதனை படைத்த வாலிபர் -


கடல் வழியாக பயணம் செய்பதில் அதிக ஆர்வம் கொண்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் 45 நாட்களில் உலகை சுற்றிவந்து சாதனை படைத்துள்ளார்.
பிரான்காயிஸ் கபார்ட்(34) என்ற நபர், 30 மீற்றர் நீளமுள்ள பாய்மரப்படகு ஒன்றில், கடந்த மாதம், பிரான்சில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
42 நாட்கள், 16 மணி நேரம், 40 நிமிடம், 35 விநாடிகளில் உலைகை சுற்றி முடித்தார்.
கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தாமஸ் கோவிலே என்பவர் 49 நாட்களில் படகு மூலம் உலகை சுற்றி வந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

அந்த சாதனையை தற்போது பிராகாயிஸ் கபார்ட் முறியடித்துள்ளார். அவர் முந்தைய சாதனையை விட 6 நாட்கள், 10 மணி நேரத்திற்கு முன்னதாக உலகை சுற்றிவந்து புதிய சாதனையை படைத்துள்ளார்.
அவரது சாதனை அவரது படகில் உள்ள கருப்புப்பெட்டி மற்றும் ஜி.பி.எஸ். ஆகிவற்றை சரிபார்த்தபின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என உலக படகு வேக கவுன்சிலை சேர்ந்த பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
இவருடன் சேர்த்து இதுவரை நான்கு பேர் கடல் வழியாக உலகை சுற்றிவந்து சாதனை படைத்துள்ளனர். 2004-ம் ஆண்டு, பிரான்சின் பிரான்சிஸ் ஜோயான்(72 நாட்கள் 22 மணிநேரம்), 2005-ம் ஆண்டு, பிரிட்டன் பெண்ணான எல்லென் மெக்ஆர்தர்(71 நாட்கள் 14 மணிநேரம்) ஆகியோரும் படகு மூலம் உலகை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளனர்.

45 நாட்களில் உலகை சுற்றி வந்து சாதனை படைத்த வாலிபர் - Reviewed by Author on December 18, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.