அண்மைய செய்திகள்

recent
-

130 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு -


சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை ஒன்றை பாதுகாக்கப்பட்ட நிலையில் கண்டெடுத்துள்ளனர்.
ஜியாங்சி மாகாணத்தில் உள்ள Ganzhou பகுதியில் புதிய பாடசாலை ஒன்றின் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறித்த முட்டையை கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை குறித்த பகுதியில் இருந்து 30 டைனோசர் முட்டைகளை மீட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் டைனோசர்கள் மிக அதிகமாக வாழ்ந்து வந்துள்ளது நிரூபணமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
130 மில்லியன் ஆண்டுகள் பழமையான அந்த முட்டைகள் கட்டுமான ஊழியர்களின் இயந்திரங்களுக்கு சிக்காமல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.


தடிமனான ஓட்டுடன் பாறை போன்ற பொருள் இருப்பதை அறிந்த கட்டுமான ஊழியர்கள் உடனடியாக தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததுடன், பொலிசாருக்கும் தகவல் அளித்தனர்.
இதனையடுத்து குறித்த கட்டுமான பகுதிக்கு விரைந்து வந்த அதிகாரிகள் உள்ளிட்ட பொலிசார், அப்பகுதியில் இருந்து 30 முட்டைகள் வரை இதுவரை மீட்டுள்ளனர்.
தற்போது மீட்கப்பட்டுள்ள முட்டைகளை அடுத்தகட்ட ஆய்வுக்கு என தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வருகின்றனர்.
130 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு - Reviewed by Author on December 31, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.