ஆளில்லா தீவில் வசிக்கும் 90 வயது தாத்தாவின் துணிச்சல் -
அமெரிக்காவின் அருகில் இருக்கும் பியூர்டாரிகோ தீவு, புயலால் பாதிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
எனினும், 90 வயது முதியவர் ஒருவர் மட்டும் வெளியேறாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.
பியூர்டாரிகோ என்பது அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் மிகச்சிறிய தீவு ஆகும். இங்கு கடந்த சில மாதங்களாக புயல் வீசி வருகிறது. இதன் காரணமாக, இந்த தீவின் பல பகுதிகள் அழிந்துவிட்டன.
லட்சக்கணக்கான மக்கள் இந்த தீவை விட்டு வெளியேறிவிட்ட நிலையில், ‘அலிஜான்ரோ லா லுஸ் ரிவரா’ என்னும் முதியவர் மட்டும் வெளியேறாமல் அங்கு வசித்து வருகிறார்.
பியூர்டாரிகோவில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘இர்மா’ என்ற புயல் வீசியது. இதனால் அமெரிக்க அரசு, அவசரநிலையை பியூர்டாரிகோவில் பிரகடனப்படுத்தியது.
அதன் பின்னர், மீண்டும் ‘மரியா’ என்னும் புயல் தற்போது வீசி வருகிறது. இந்த புயலின் தாக்குதலினால், ஒரே வாரத்தில் மட்டும் 1,500க்கும் அதிகமான மக்கள் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், 90 சதவீத கட்டிடங்கள் இடிந்து விழுந்து விட்டதால், லட்சக்கணக்கான மக்கள் ஊரை விட்டு வெளியேறிவிட்டனர். இந்நிலையிலும் அலிஜான்ரோ, அந்த தீவை விட்டு வெளியேற மாட்டேன் என கூறி வருகிறார்.
ஒருமுறை மட்டும் பென்சில்வேனியாவிற்கு சென்ற அவர், அங்கு இருக்க பிடிக்காமல் மீண்டும், பியூர்டாரிகோ தீவுக்கே திரும்பி வந்துவிட்டார். தற்போது, நகரத்தில் அவர் மட்டுமே தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.
கடந்த 8 நாட்களாக அங்கு மின்சாரமும், தண்ணீரும் இல்லை. எனினும், அலிஜான்ரோ தனியாக அங்கே வாழ்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
’இது தான் நான் பிறந்து ஊர். இதை விட்டு வரமாட்டேன்’ என தெரிவித்துள்ளார் அந்த முதியவர்.
ஆளில்லா தீவில் வசிக்கும் 90 வயது தாத்தாவின் துணிச்சல் -
Reviewed by Author
on
December 11, 2017
Rating:

No comments:
Post a Comment