தாயின் சிகிச்சைக்காக 62 வது மாடியில் இருந்து குதித்த மகன்: நடந்த துயர சம்பவம் -
சீனாவில் சாகச முயற்சியின் போது வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாகச வீரர் வூ யாங்னிங்குக்கு சீனாவில் அதிக ரசிகர்கள் உள்ளனர், இவரது யூடியுப் சேனலில் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை அந்நாட்டு மக்கள் அதிகம் ஷேர் செய்வார்கள்.
இந்நிலையில், யாங்னின் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது, மேலும் தனது தாய்க்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரது சிகிச்சைக்கு பணம் தேவை என்பதால் 62 வது மாடியில் இருந்து குதித்து சாகசம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்த சாகசத்திற்காக $15,000 பரிசுத்தொகை கிடைக்கும் என்பதால், இந்த தொகை தனது தாயின் சிகிச்சைக்கு உதவும் என்பதோடு மட்டுமல்லாமல் மீதியுள்ள பணத்தினை வைத்து தனது காதலியை மணம் முடிக்க திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அனைத்தும் நிறைவேறவில்லை, 62 வது மாடியில் இருந்து குதித்தபோது தவறி கீழே விழுந்து சம்பவட இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், எவ்வித உபகரணங்களும் இன்றி சாகசம் நடத்தப்பட்டதாலேயே யாங்னி உயிரிழந்துள்ளார் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தாயின் சிகிச்சைக்காக 62 வது மாடியில் இருந்து குதித்த மகன்: நடந்த துயர சம்பவம் -
Reviewed by Author
on
December 11, 2017
Rating:

No comments:
Post a Comment