அவுஸ்திரேலியாவில் தமிழ் தம்பதியினரின் மோசமான நடவடிக்கை! அடிமையாக மீட்கப்பட்ட பெண் -
இந்த சம்பவம் குறித்த வழக்கு இன்று Melbourne Magistrates நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மெல்பேர்ன் நகரில் Mount Waverleyஇல் உள்ள தனது வீட்டில் 8 ஆண்டுகளாக பெண் ஒருவரை அடிமையாக அடைத்து வைத்திருந்ததாக கந்தசாமி கண்ணன் மற்றும் அவரது மனைவி குமுதினி கண்ணன் ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
2007ஆம் ஆண்டு கண்ணன் தம்பதியினரின் மூன்று குழந்தைகளை பராமரிக்கவென இந்தியாவில் இருந்து சுற்றுலாப் பயணிகள் விசாவில் குறித்த பெண் அவுஸ்திரேலியா வந்துள்ளார்.
வீட்டை விட்டுத் தனியாக வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை எனவும், ஊதியமும் எதுவும் வழங்கப்படவில்லை எனவும், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த பெண் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 5:30 மணி தொடக்கம் மறுநாள் அதிகாலை 3:30 மணி வரை எவ்வித ஓய்வுமின்றி அப்பெண் பணிபுரிய வைக்கப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் 2015ஆம் ஆண்டில் கண்ணன் குடும்பத்தினர் ஒரு மாத காலம் சுற்றுலா சென்ற நிலையில், அந்த காலப்பகுதியில் உணவு ஏதும் இன்றி, மயங்கிய நிலையில் குளியல் அறையில் குறித்த பெண் இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கண்ணன் தம்பதியினர், அப்பெண்ணைத் தனது குடும்பத்தில் ஒருவராகவே நடத்தி வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பிலான விசாரணை நாளையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் தமிழ் தம்பதியினரின் மோசமான நடவடிக்கை! அடிமையாக மீட்கப்பட்ட பெண் -
Reviewed by Author
on
December 12, 2017
Rating:

No comments:
Post a Comment