உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் பன்டோன் கேக்: எங்கே தெரியுமா? -
இத்தாலியில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் பன்டோன் கேக் பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் கிறிஸ்துமஸ் பண்டிகையானது பன்டோன் கேக் இல்லாமல் அங்குள்ள மக்கள் கொண்டாட மாட்டார்கள். பழங்கள், உலர்ந்த திராட்சை மற்றும் இனிப்பு கலந்து செய்யப்படும் இந்த கேக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
இந்நிலையில், இத்தாலியின் மிலன் நகரில் உலகின் மிகப்பெரிய கேக் செய்யப்பட்டுள்ளது. 140 கிலோ எடையுள்ள இந்த கேக் இரண்டு மீற்றர் உயரம் கொண்டுள்ளது. அதனை 1200 துண்டுகளாக வெட்டலாம்.
கேக்கை உருவாக்கியவர்கள் அதனை அலங்காரம் செய்து கடையில் பார்வைக்காக வைத்திருக்கின்றனர். இது உலகின் மிகப்பெரிய பன்டோன் கேக் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது வழக்கமான கேக்கை போல் இல்லாமல் சிறிது ஈரப்பதம் இன்றி காணப்படுகிறது. பெரிய அளவில் செய்வதற்காக இது மிகவும் மெதுவாக செய்யப்பட்டுள்ளது. கேக்கை செய்வதற்கு 36 மணி செலவானதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் பாரம்பரிய உணவான இந்த பன்டோன் கேக் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் பன்டோன் கேக்: எங்கே தெரியுமா? -
Reviewed by Author
on
December 19, 2017
Rating:

No comments:
Post a Comment