ஜெயலலிதா சிகிச்சை வீடியோவில் மீண்டும் பகீர்த் தகவல்!! இவற்றை கவனித்தீர்களா? -
ஜெயலலிதா கடந்த ஆண்டு 75 நாட்கள் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சசிகலா வீடியோ எடுத்தார் என்று தினகரன் கூறியிருந்தார்.
அதை வெளியிடும் போது வெளியிடுவோம் என்று கூறியிருந்தார் தினகரன். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்றைய தினம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
பெரம்பலூர் எம்எல்ஏ வெற்றிவேல் இந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார்.நைட்டியில் உள்ள ஜெயலலிதா ஜூஸ் குடித்துக்கொண்டே டிவி பார்க்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அவர் அக்டோபர் மாதமே இறந்து போனதாகவும் தகவல் வெளியானது.
ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வீடியோவில் ஜெயலலிதாவின் கால்கள் இருக்கின்றன.
ஜெயலலிதா உயிரோடுதான் இருந்தார் என்பது அனைவருக்குமே தெரியும் என்றும், அது தெரிந்துதான் தர்மயுத்தம் நடத்தினார் என்றும் இந்த வீடியோவை வெளியிட்ட வெற்றி வேல் கூறியுள்ளார்.
திண்டுக்கல் பூட்டு வரைக்கும் இது தெரியும் என்று கூறி திண்டுக்கல் சீனிவாசனை கூறினார். இந்த வீடியோ காட்சிகள் எந்த தேதியில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
அவர் உடல்நலம் தேறி வந்த பின்னர் நைட்டி அணிந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது. ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றியும், மரணம் பற்றியும் பல்வேறு மர்மங்கள் இருந்தன.
இந்த நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டு ஜெயலலிதாவை கொச்சைப்படுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார் வெற்றி வேல். இப்போது அவசியம் வந்ததால் வெளியிட்டதாக கூறியுள்ளார்.
தினகரன் தரப்பை சேர்ந்த வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டார். இதில் ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. அவரது கால்கள் இருப்பது போன்ற காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.
இருப்பினும், இந்த வீடியோ அப்பல்லோவில் சிகிச்சை பெறும்போதுதான் எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் ஒரு மினி மருத்துவமனை செட்அப் செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே.
ஜெயலலிதா வெகு நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும் தகவல் உண்டு. இந்த நிலையில், இந்த வீடியோ என்பது, வீட்டில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்டதா அப்பல்லோவில் எடுக்கப்பட்டதா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, சில தினங்கள் முன்பு அளித்த பேட்டியில், ஜெயலலிதா, தங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே சீரியசான நிலையில் இருந்ததாக தெரிவித்தார்.
மக்கள் அச்சப்படுவார்கள், என்பதால் தாங்கள் மறைத்ததாக அவர் கூறினார்.
ஜெயலலிதா ஜூஸ் குடித்த வீடியோ இப்போது வெளியாகியுள்ள நிலையில், ஜெயலலிதா தெம்பாகவே இருந்தார் என பிரதாப் ரெட்டி கூறியிருக்கலாமே, ஏன் மக்கள் அச்சப்படுவார்கள் என உண்மையை மறைத்ததாக தெரிவிக்க வேண்டும்? என்ற கேள்வி சாமானியர்களிடம் எழுந்துள்ளது.
விசாரணை கமிஷன் ஜெ. மறைவு குறித்து விசாரித்து வரும் நிலையில், இந்த வீடியோவை இப்போது வெளியிட்டுள்ளதால், இதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.
மார்பிங் செய்யப்பட்ட வீடியோவா அல்லது போயஸ் இல்லத்தில் முன்பு எப்போதோ எடுக்கப்பட்ட வீடியோவா என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
ஜெயலலிதா சிகிச்சை வீடியோவில் மீண்டும் பகீர்த் தகவல்!! இவற்றை கவனித்தீர்களா? -
Reviewed by Author
on
December 22, 2017
Rating:

No comments:
Post a Comment