தங்களைப் புனிதர்களாகக் காட்ட அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றனர்
தட்டிக்கேட்க ஆளில்லை என்றால் தம்பி சண்டப்பிரசண்டம் என்றொரு பழமொழி நம் தமிழ் மொழியில் உண்டு.
அந்தப் பழமொழியின் தத்துவத்தை இன்று நாம் நேரடியாகவும் அனுபவ ரீதியாகவும் உய்த் துணர முடிகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத் தில் ஆமைகள் போல புலன்கள் அனைத்தும் அடங்கிப் பேசாதிருந்தவர்கள் இப்போது பேசத் தலைப்பட்டுள்ளனர்.
அதிலும் வடக்கு மாகாண சபையின் முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைக் குறை சொல்வதனூடாக தங்களைப் புனிதர்களாகக் காட்டிக் கொள்ள இத்தகையவர்கள் முற்படு வது கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.
வடக்கின் முதலமைச்சருக்கு எதிராகத் தீர் மானம் கொண்டுவருவது, கடிதம் எழுதுவது, சபைகளைக் குழப்புவது, கேள்விகள் எழுப்பி சபை நடவடிக்கையை வேறு பக்கம் திசை திருப்புவது என்றெல்லாம் நடந்தபோது அவர் களுடன் சேர்ந்து பக்கவாத்தியம் இசைத்த வர்கள் இப்போது ஆடு நனைகிறது என்று அழுகின்றனர்.
வடக்கு மாகாண சபையின் நான்கு ஆண்டு காலம் கடந்துவிட்டது. அதுவரை காலமும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்குப் பெருந் தொந்தரவு கொடுத்தவர்கள் ஈற்றில் இரவோடு இரவாக ஆளுநரிடம் சென்று நம்பிக்கையில் லாப் பிரேரணையைத் கொடுத்தார்கள்.
அவர்கள் கொடுக்கட்டும் நாம் நம்ம பாட்டில் இருந்து பார்ப்பம் என்றில்லாமல் அவர்களு டன் ஓடிச் சென்றவர்கள் இப்போது வடக்கு மாகாண சபை எதுவும் செய்யவில்லை என்று கூறுவதன் உள்நோக்கம்தான் புரியவில்லை.
கெளரவ அவைத் தலைவர் அவர்களே! இது வடக்கு மாகாண சபை, வடக்கு மாகா ணத்தின் மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வர்கள்; உயிரிழப்புக்களைச் சந்தித்தவர்கள்; எங்கள் மக்கள் படும் துன்பங்களுக்கு நாங் கள் அத்தனை பேரும் ஏதோவொரு வகையில் காரணமாக இருக்கின்றோம்.
ஆகையால் சபை நடவடிக்கைகளைக் குழப்பாமல், எங்கள் மக்களுக்காகச் சேவை செய்வோம் என்று எழுந்து நின்று பேசியிருந் தால், அதனைத் தமிழ் மக்கள் வரவேற்றி ருப்பர் அல்லது கொழும்பில் இருந்து வரும் தொலைபேசி உத்தரவுக்கமையவே வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் செயற் படுகின்றனர் என்று வீராப்புடன் தெரிவித்திருந் தால் இன்று நிலைமை மாறியிருக்கும்.
இவை எதனையும் செய்யாமல் வடக்கு மாகாண சபையின் குழப்பங்களைக் கட்டுப் படுத்தாமல் சபையின் இறுதிக் காலத்தில் நின்று நீலிக்கண்ணீர் வடிப்பது தர்மத்துக்கு உகந்ததன்று.
எதுஎவ்வாறாயினும் நாம் ஒன்றை மட்டும் துணிந்து கூறமுடியும். யுத்தத்தால் பாதிக்கப் பட்ட எங்கள் மக்கள் வீடின்றி, நாளாந்த சீவனோ பாயத்துக்கே அல்லல்பட்டுக் கொண்டிருந்த போது,
அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண் ணாமல் அவர்களின் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்து; தமிழர் அரசு என்பதை நிர்மூலமாக்க யார் யாரெல்லாம் காரணமாக இருந்தார்களோ அவர்கள் நிச்சயம் இறை வனால் தண்டிக்கப்படுவர்.
இது நடக்கும்போது சம்பந்தப்பட்ட ஒவ் வொருவரும் தம் செயலுக்காக வருந்துவர் என்பதே சத்தியவாக்கு.
-valampuri-

Reviewed by Author
on
December 17, 2017
Rating:

No comments:
Post a Comment