உலகின் பிரபல மனிதர்களாக பிரான்ஸ் ஜனாதிபதி, போப் பிரான்ஸிஸ் தெரிவு -
பிரான்ஸை சேர்ந்த சந்தை ஆராய்ச்சி மற்றும் கருத்து கணிப்பு நிறுவனமான Ifop 2017-க்கான உலகின் பிரபல மனிதர்கள் குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியது.
18 வயதுக்கு மேலான 1009 பேரிடம் கடந்த 15-லிருந்து 18-ஆம் திகதி வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளை நாட்டின் பாரீஸ் மேட்ச் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மற்றும் போப் பிரான்ஸுசை 33% பேர் ஆதரித்து 2017-ன் பிரபல மனிதர்களாக தெரிவு செய்துள்ளனர்.
ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கலுக்கு 11% பேரும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரெசா மேவுக்கு 6% பேரும் ஆதரவளித்துள்ளனர்.
அதே போல இந்தாண்டு நடைபெற்ற குறிப்பிடத்தக்க மற்றும் பிரபல நிகழ்வில் மேக்ரான் வென்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கு 23% பேர் ஆதரவளித்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியா போர் மற்றும் பிரான்ஸ் பாடகர் ஜானி ஹால்டே மரணம் குறிப்பிடத்தக்க நிகழ்வு என 15% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகின் பிரபல மனிதர்களாக பிரான்ஸ் ஜனாதிபதி, போப் பிரான்ஸிஸ் தெரிவு -
Reviewed by Author
on
December 29, 2017
Rating:
Reviewed by Author
on
December 29, 2017
Rating:


No comments:
Post a Comment