அண்மைய செய்திகள்

recent
-

உள்ளங்கை அளவில் உயிருக்கு போராடிய குழந்தை! இப்போது


பெண் என்பவள் தாய்மை அடையும் போது தான் முழுமை அடைகிறாள் என கூறுவார்கள், ஒரு பெண் தாயாகும் போது, குழந்தையை கையில் ஏந்தும் அவள் படும் சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது!!!
அப்படி சந்தோஷமான தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்த Jeremy தம்பதியினருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி, இரட்டை குழந்தையை சுமந்த Jeremy-யின் மனைவி Leslie-க்கு 22 வாரத்திலேயே அதாவது கடந்தாண்டு நவம்பர் 20ம் திகதியே குழந்தை பிறந்துவிட்டது.
455 கிராம் எடையுடன் உள்ளங்கைக்குள் அடங்கக்கூடிய குழந்தைக்கு Grayson Barnett என பெயரிட்டனர், மருத்துவர்களும் குழந்தை உயிர்பிழைத்து வாழ்வது கடினம் என்றனர்.


ஏற்கனவே பெண் குழந்தையை இழந்த சோகத்தில் இருந்த Jeremy-க்கு என்ன செய்தென்றே தெரியவில்லை, ஒருவழியாக ஆண் குழந்தையை காப்பாற்ற வேண்டிய சூழலில் Seattle Children's Hospital-ன் Neonatal Intensive Care Unit இன்குபெட்டரில் வைத்து வளர்த்தனர்.
தோல்களும் மிக மெலிதான, சின்னஞ்சிறு உறுப்புகளுடன் பத்திரமாக பாதுகாக்கப்பட்டான் Grayson Barnett, ஒரு ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸை கொண்டாட தயாராகிவிட்டான்.
ஒவ்வொரு நிமிடமும் கொடூரமாக இருந்தாக கூறும் Jeremy, மிகவும் அதிர்ஷ்டசாலி என பெருமை கொள்கிறார்.


உள்ளங்கை அளவில் உயிருக்கு போராடிய குழந்தை! இப்போது Reviewed by Author on December 21, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.