வவுனியாவில் தமிழத்தேசிய கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியது.
வவுனியாவில் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிசபைகளுக்கான கட்டுப்பணத்தினை மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் தமிழரசுகட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சருமான மருத்துவர் ப. சத்தியலிங்கம் தலைமையில் சென்ற பிரதிநிதிகள் கட்டுபணம் செலுத்தியதுடன் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் இருக்கின்ற ஒரு நகரசபைக்கும் மூன்று பிரதேச சபைகளுக்கும் உரிய கட்டுப்பணங்களை தமிழரசுக்கட்சியில் போட்டியிடுகின்ற வீட்டுச்சின்னத்தில் இன்று கட்டுப்பணத்தினைச் செலுத்தியிருக்கின்றோம். இந்த அனைத்துச் சபைகளிலும் நிச்சயமாக தமிழரசுக்கட்சி ஒரு பெரிய வெற்றியைப் பெறும் என்ற நமபிக்கையில் நாங்கள் இருக்கின்றோம். எங்களுடைய மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கொள்ளைகளுக்கு அடிப்படையிலே தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு பெரிய ஒரு ஆதரவைத்தந்து இந்த நான்கு சபைகளிலும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நிச்சயமாகக்கைப்பற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
நாங்கள் தமிழ்ததேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற மூன்று கட்சிகளும் நாங்கள் இந்தக்கூட்டமைப்பினுடைய வெற்றிக்காக விட்டுக்கொடுப்புக்களுடன் நாங்கள் நிச்சயமாகப்பணியாற்றுவோம். வவுனியா மாவட்டத்திலே கடந்த காலத்தில் கடந்த ஆட்சியின்போது வவுனியா மாவட்ட மக்களுக்குத் தெரியாத வகையிலே பெருவாரியான குடியேற்றத்தை இங்கு செய்திருக்கின்றார்கள். என்று மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று கட்டுப்பணம் செலுத்துவதற்கு தமிழரசுக்கட்சியின் பங்களாக்கட்சிகளின் உறுப்பினர்கள் வவுனியா முன்னாள் நகர உப பிதா சந்திரகுலங்கம், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன மயூரன், மற்றும் தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் உடன் சென்றிருந்தனர். வவுனியா நகரசபை உட்பட நான்கு சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு வவுனியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பு மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. வவுனியா மாவட்டத்தின் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடுவதற்காகவே இந்தக் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர் ம.தியாகராசா, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈபிஆர்எல்எப்) மத்திய குழு உறுப்பினர் க.அருந்தவராசா, முன்னாள் நகரசபை உறுப்பினர் சிவகுமார், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான பரமேஸ்வரன், தர்மலிங்கம், மாவட்ட பிரஜைகள் குழுவின் ஸ்தாபகத் தலைவர் தேவராசா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Reviewed by Author
on
December 16, 2017
Rating:
Reviewed by Author
on
December 16, 2017
Rating:

No comments:
Post a Comment