கடந்த ஆண்டில் 3078 பேரின் உயிர்களை காவு கொண்ட வாகன விபத்துக்கள் -
கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 935 பாதசாரிகள் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு குறித்த தேசிய சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களினால் 289 சைக்கிளோடிகள் உயிரிழந்துள்ளதுடன், வீதி விபத்துக்களினால் இடம்பெற்ற மரணங்களில் மூன்றில் ஒரு மரணங்கள் பாதசாரிகள் மற்றும் சைக்கிளோட்டிகளின் மரணங்களாக பதிவாகியுள்ளன.
கவனயீனமாக வாகனங்களை முந்திச் செல்லல், அதிக வேகம், வீதிப் போக்குவரத்து சமிக்ஞைகளை கவனத்தில் கொள்ளாமை, கவனயீனம் போன்ற காரணினால் இவ்வாறான மரணங்கள் அதிகளவில் சம்பவிப்பதாக வீதிப் பாதுகாப்பு குறித்த தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 3078 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களில் அதிகளவானவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், விபத்துக்களில் 998 மோட்டார் சைக்கிளை செலுத்திய அல்லது அதில் பயணித்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் 3078 பேரின் உயிர்களை காவு கொண்ட வாகன விபத்துக்கள் -
Reviewed by Author
on
January 19, 2018
Rating:

No comments:
Post a Comment