அண்மைய செய்திகள்

recent
-

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனங்கள்: பட்டியல் வெளியானது -


உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனங்கள் தொடர்பில் வெளியான பட்டியலில் முதலிடத்தை ஏர் நியூசிலாந்து தட்டிச் சென்றுள்ளது.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த தனியார் விமான சேவை நிறுவனம் ஒன்று கடந்த ஆண்டில் மிகவும் பாதுகாப்பான சேவையை வழங்கிய உலகின் 20 விமான சேவை நிறுவனங்களின் பட்டியலை தொகுத்து வெளியிட்டுள்ளது.
அதில் British Airways மற்றும் Virgin Atlantic ஆகிய 2 பிரித்தானிய நிறுவனங்களும், Virgin Australia மற்றும் Qantas ஆகிய 2 அவுஸ்திரேலிய நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன.
மட்டுமின்றி ஐக்கிய அமீரகத்தின் Emirates மற்றும் Etihad ஆகிய இரு நிறுவனங்களும் குறித்த பட்டியலில் இடபெற்றுள்ளன.

ஆண்டு தோறும் உலகில் உள்ள குறிப்பிடத்தக்க விமான சேவை நிறுவனங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொண்டு, அதை வரிசைப்படுத்தி தொகுத்து வெளியிட்டு வருகின்றது குறித்த நிறுவனம்.
மட்டுமின்றி மிகவும் பாதுகாப்பற்ற விமான சேவை நிறுவங்களின் பட்டியலையும், குறைந்த கட்டணத்தில் மிகவும் பாதுகாப்பான சேவை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலையும் குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
மிகவும் பாதுகாப்பற்ற விமான சேவை நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் வடகொரியாவின் Air Koryo விமான சேவை நிறுவனம் உள்ளது.
மேலும் நேபாளத்தைச் சேர்ந்த நான்கு விமான சேவை நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை நிறுவனங்கள்: பட்டியல் வெளியானது - Reviewed by Author on January 07, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.