அண்மைய செய்திகள்

recent
-

கல்லீரல் சுத்தமாக்கலாம்: உங்களுக்கான பயனுள்ள குறிப்புகள் -


சரியான சத்து, உடல் பராமரிப்பு, கழிவுப் பொருள் நீங்குதல் போன்ற அனைத்தும் சரியாக இருந்தால் நோய்களே நம்மை நெருங்காது.
அதன் அடிப்படையில் நம் உடலில் கழிவுகளை வெளியேற்றவும், ரசாயனம், வைரஸ், கிருமி போன்ற தாக்குதல்களில் இருந்தும் கல்லீரல் பெரிதும் உதவுகிறது.
எனவே பாதுகாப்பான முறையில் நம் கல்லீரலை எப்படியெல்லாம் சுத்தம் செய்வது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
கல்லீரலை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?
  • முழு தானியங்களில் அதிக நார்சத்துக்கள் உள்ளது. அவை கல்லீரல் நச்சுப் பொருட்களை நீக்கவும் உதவுவதால், அடிக்கடி முழு தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தினமும் ஒரு முறை க்ரீன் டீ குடித்து வரலாம். அதனால் கல்லீரலில் ஆபத்தான கொழுப்பு சேருவதை தடுக்கும்.
  • வால்நட், பீட்ரூட், கேரட், பச்சை இலைக் காய்கறிகள் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.
  • நம் உடலுக்கு தேவையான தண்ணீரை கட்டாயம் குடிக்க வேண்டும். அதனால் உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகள் வெளியேறி கல்லீரல் சுத்தமாகும்.
  • ஒரு பாட்டில் நீரில் 2-4 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை கலந்து சாதாரண நீர் போல் அடிக்கடி பருகிக் கொண்டே இருக்கலாம். ஆனால் பற்களில் படாமல் குடிப்பது நல்லது.
  • ஒரு கப் பாலில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் அது வீக்கங்களை குறைத்து உடலில் உள்ள கிருமிகளை அழித்து விடும்.
  • பூண்டை சமைத்து, வேக வைத்து அல்லது நசுக்கி போன்ற வடிவில் பயன்படுத்தி வந்தால் பல உடல்நலக் கோளாறுகளில் இருந்து தப்பிக்கலாம்.
  • ஆப்பிள் பழத்தில் உள்ள சத்துகள் ஜீரண சக்திக்கு உதவுவதுடன், கல்லீரல் தன் வேலையைச் செய்யவும் உதவுகின்றது.
கல்லீரல் சுத்தமாக்கலாம்: உங்களுக்கான பயனுள்ள குறிப்புகள் - Reviewed by Author on January 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.