அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட வைத்தியசாலை மாற்றான் தாய் மனப்பாங்கில் மத்திய அரசு, மூடி விடுங்கள் - வைத்தியசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் வி.எஸ் சிவகரன்-(படம்)


மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள வைத்திய நிபுனர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு கானுங்கள்.

இல்லா விட்டால் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவே வைத்தியசாலையை பூட்டுப் போட்டு பூட்ட வேண்டிய பரிதாபத்துக்குரிய துர்பாக்கிய நிலை ஏற்படலாம் என வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளர் வி.எஸ் சிவகரன் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ணவிற்கு நேற்று வெள்ளிக்கிழமை (20-1-2018) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,

 என மிகுந்த மன வேதனையுடன்  தெரிவித்துக் கொள்கின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


-மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் ஆளணி பற்றாக்குறையினால்  நிர்வாகம் நிலையிழந்து போவதாக  எலவே தங்களுக்கு பல முறை கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் எமது நிலையை தெரிவித்திருந்ததுடன்  சனாதிபதிக்கும் கடிதம் எழுதியிருந்தோம்.

இதுவரை எந்தவித  நடவடிக்கையும் எடுக்கவில்லை வீதியிலே குழந்தை பிறப்பு நிகழும் விசித்திரத்தை ஏற்படுத்திவிட்டீர்கள்.

மனித வாழ்வின் அத்தியாவசிய தேவையாகிய மருத்துவ சேவையைக்கூட அந்த நாட்டு மக்களுக்கு வழங்க முடியாவிட்டால் அந்த ஆட்சி நடப்பதில் என்ன பயன்?

மனிதபிமானத்திலும் சிங்கள தேசம் தமிழர் தேசம் என கடந்த காலத்தில் பார்த்து பழகியதையே இன்றும் தொடர் கதையாக்கியுள்ளீர்கள்.

 எப்படி நல்லிணக்கம் ஏற்படும். மன்னார் வைத்திய சாலையில் உள்ள குறைபாடுகளை தீர்க்குமாறு பல்வேறு தரப்புகளால் விடுத்த கோரிக்கையை நிராகரிக்கும் நீங்கள் மன்னார் வைத்தியசாலையை மூடிவிடுங்கள்.

பொது மக்ககள் தமது வைத்திய சேவையை வேறு இடங்களுக்கு செல்வார்கள் நீங்கள் மனிதபிமானத்தில் விலை பேசுகிறீர்கள். என்றே எண்ணுகின்றோம்.

 தற்போதைய சூழலில் அவசிய தேவையாகிய மகப்பேற்று வைத்திய நிபுணர் உட்பட பல்வேறு விதமான துறை சார்ந்த பிரிவுகளுக்கும் வைத்திய நிபுணர்கள் இல்லை.

 குறைந்த பட்சம் மயக்க மருந்து ஏற்றுவதற்றுகூட ஆள் இல்லை பெயரளவில் தான் மாவட்ட வைத்திய சலையாக காணப்படுகின்றது.

எனவே கர்பிணிதாய்மார் வீதியில் இறங்கி போராடி ஒருவாரம் ஆகியும் எந்தவித தீர்வும் கிடைக்கிவில்லை எந்த விதமான அதிகாரமும் இன்றி பெயரளவில் தான் மாகாண சுகாதார அமைச்சு இயங்குகின்றது.

 ஆகவே மன்னார் மாவட்டத்தில் வைத்திய சாலையில் உள்ள பல்வேறு விதமான குறைபாடுகளை  ஆராய்ந்து உடனடியாக தீர்வு காண வேண்டும்.

 மத்திய சுகாதார அமைச்சு எங்களை வஞ்சிக்கின்றது யுத்தவடுக்களை சுமந்து ஏதிலிகளாய் உள்ள சாமானிய மக்களின் அடிப்படை உரிமையில்  வேண்டுமென்று சதி செய்து சவாரியிடுகிறீர்கள்.

உங்களால் மாவட்ட வைத்திய சாலையை சரியாக நிர்வாகிக்க விருப்பம் இல்லை  என்றால் மூடி விடுங்கள்.

எத்தனை தடவைகள் தான் கோரிக்கை விடுப்பது இது ஒன்றும் வலிந்து கெஞ்சிக் கடன் கேட்கும் விடயமல்ல.

 உங்கள் தார்மீக கடமையாகும் வருடக்கணக்கில் ஏமாற்றி அவமதிக்கிறீர்கள் விரக்தியின் உச்சநிலைக்கு உட்படுத்திவிட்டீர்கள் பாவம் எமது மக்களை ஏமாற்றாதீர்கள் நீங்கள் மட்டுமா  எமது மக்களால் தெரிவு செய்யப்பட்ட வன்னியில் உள்ள ஒரு அமைச்சரும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் கூட இந்த விடயத்தில் எமது மக்களை பரிதாபத்திற்கு உட்படுத்தி விட்டார்கள்.

அகவே தயவு செய்து உடனடியாக எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கானுங்கள் .இல்லா விட்டால் வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவே வைத்தியசாலையை பூட்டுப் போட்டு பூட்ட வேண்டிய பரிதாபத்துக்குரிய துர்பாக்கிய நிலை ஏற்படலாம். என மிகுந்த மன வேதனையுடன்  தெரிவித்துக் கொள்கின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-மன்னார் நிருபர்-


மன்னார் மாவட்ட வைத்தியசாலை மாற்றான் தாய் மனப்பாங்கில் மத்திய அரசு, மூடி விடுங்கள் - வைத்தியசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் வி.எஸ் சிவகரன்-(படம்) Reviewed by Author on January 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.