அண்மைய செய்திகள்

  
-

சருமத்தில் இப்படி வெள்ளைத் திட்டுக்கள் உள்ளதா? -


சருமத்தில் உள்ள வெள்ளை நிறத் திட்டுகள் முகம், கைகள், கால்கள் மற்றும் பாதம் போன்ற பகுதிகளில் தோன்றும்.
மெலனினை உற்பத்தி செய்யும் சரும செல்கள் முறையாக செயல்படாமல் போவதால் வெள்ளை நிறத் திட்டுக்கள் வருகிறது.
அதுவும் சில நேரங்களில் இந்த வெள்ளைத் திட்டுக்கள் ஹைப்பர் தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், விட்டமின் B12 குறைபாடு, மரபியல் பண்புகள் போன்றவற்றாலும் வரும்.
வெள்ளை திட்டுக்களை போக்குவது எப்படி?
  • சிறிது வேப்பிலையை அரைத்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் நீர் கலந்து பேஸ்ட் செய்து, அதை வெள்ளைத் திட்டுக்களின் மீது தினமும் 2 முறை தடவி வரலாம்.
  • தினமும் குளிக்கும் நீரில் சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து வெள்ளைத்திட்டுக்கள் உள்ள இடத்தை அந்நீரில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  • முட்டைக்கோஸ் ஜூஸை வெள்ளைத் திட்டுக்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்துக் கழுவலாம் அல்லது நீரில் சிறிது முட்டைக்கோஸ் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரால் பாதிக்கப்பட்ட இடத்தை கழுவ வேண்டும்.
  • துளசி இலைகளை பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன், வெள்ளைத் திட்டுக்களின் மீது தடவி கொண்டு வந்தால் வெள்ளைத் திட்டுக்கள் மறையும்.
  • 1 கப் நீரில் சிறிது வேப்பிலையை போட்டு கொதிக்க வைத்து அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால், சரும பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
  • தினமும் ஒரு ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டு வரலாம் அல்லது ஆப்பிள் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் சருமத்தில் தடவலாம்.
  • தயிருடன் மஞ்சள் தூள் கலந்து, அதை வெள்ளைத் திட்டுக்கள் உள்ள இடத்தில் தடவி நன்கு காய்ந்த பின், வேப்பிலை நீரால் கழுவ வேண்டும்.
  • புளி விதையை வெயிலில் நன்கு காய வைத்து பொடி செய்து அந்த பொடியை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 2-3 மணிநேரம் கழித்து வேப்பிலை நீரால் கழுவ வேண்டும்.
  • கற்றாழை ஜெல் மற்றும் இஞ்சி சாறு ஆகிய இரண்டையும் கலந்து, வெள்ளைத் திட்டுக்கள் உள்ள பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
சருமத்தில் இப்படி வெள்ளைத் திட்டுக்கள் உள்ளதா? - Reviewed by Author on January 11, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.